News December 9, 2024
மொபைல் யூஸ் பண்றதுல இப்படி ஒரு பிரச்னையா..!

இன்று அனைத்து வயதினருக்கும் செல்போன் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. ஆனால் பெற்றோர்- குழந்தைகள் உறவில் விரிசல் ஏற்படுவதற்கு ஸ்மார்ட்போன்கள் முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது பற்றி தெரியுமா? 73% பெற்றோர்களும், 69% குழந்தைகளும் இதை உறுதி செய்துள்ளனர். ஆனால், அதே பெற்றோர்களே, மொபைல் போனை அதிக நேரம் யூஸ் பண்ணுவதில் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருப்பதுதான் ட்விஸ்ட்.
Similar News
News March 4, 2026
மறந்துக்கூட வீட்டில் லட்சுமி படத்தை இங்க வெச்சுராதீங்க!

வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் லட்சுமியின் படம் அல்லது விக்கிரகத்தை வடக்கு திசையில் இருந்து தெற்கு பார்த்தபடி வைக்க வேண்டுமாம். அதுவே, மங்களகரமானது என சொல்லப்படுகிறது. இதுதவிர, தாமரை மலரில் இருக்கும் லட்சுமி படத்தை இந்த திசையில் வைத்தால் வீட்டில் பணத்திற்கு தட்டுப்பாடு வராது என்ற நம்பிக்கை உள்ளது. தவறுதலாக கூட வடக்கு பார்த்தபடி வைக்க வேண்டாம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
News March 4, 2026
சிக்கலில் நவாஸ் கனி MP

2019 & 2024 MP தேர்தல்களின் போது நவாஸ் கனி, தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை ஒப்பிட்டதில் அவர் வருமானத்தை மறைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த வழக்கின் விசாரணையில், ₹18 கோடி அளவுக்கு வித்தியாசம் இருப்பதாகவும், ஏராளமான முரண்பாடுகள் உள்ளதாகவும் சென்னை HC கூறியது. அவரது வருமான விவரங்களை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்ட நிலையில், ஆதாரங்களின்படி நவாஸ் கனி மீது நடவடிக்கை எடுப்பதாக IT உறுதியளித்தது.
News March 4, 2026
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா காங்.,?

திமுக – காங்., கூட்டணியை உறுதிப்படுத்த இறுதியாக ப.சிதம்பரம் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டார். ஆனால், அந்த பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, 40+ கேட்ட தொகுதிகளை கேட்ட காங்கிரஸின் கோரிக்கையை திமுக நிராகரித்துவிட்டதாம். இதனால், வலுவாக இருக்கும் திமுக கூட்டணியில் இருந்து முதல் கட்சியாக காங்., விலக அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


