News August 27, 2024
இதெல்லாம் ஒரு கொடியா? விஜய்யை விமர்சித்த நாசர்

தவெக கொடியை அறிமுகம் செய்து அதிகாரப்பூர்வமாக அரசியல் களத்தில் குதித்துள்ளார் விஜய். இந்நிலையில், விஜய் அரசியலை மற்ற கட்சிகளை காட்டிலும் திமுக கடுமையாக விமர்சிக்கிறது. நிகழ்ச்சியொன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் நாசர், “ஏதோ கட்சிக் கொடியை அறிமுகப்படுத்துறாராம். குங்குமப் பொட்டு, சந்தனப் பொட்டு வெச்ச மாதிரி. நடுவுல தூங்கு மூஞ்சி பூ வேற. இதெல்லாம் ஒரு கொடியா?” எனக் கேள்வியெழுப்பினார்.
Similar News
News September 19, 2025
ரோபோ சங்கர் உடலுக்கு சினிமா பிரபலங்கள் அஞ்சலி

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர் SA சந்திரசேகர், நடிகர்கள் சிவகார்த்திகேயன், MS பாஸ்கர், செந்தில், புகழ், நடிகைகள் நளினி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 4 மணிக்கு வளசரவாக்கம் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
News September 19, 2025
திமுக கூட்டணியில் உருவான சலசலப்பு!

2026 தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்டு வாங்குவதோடு, ஆட்சியிலும் பங்கெடுப்போம் என KS அழகிரி கூறிய கருத்து DMK கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தனித்து நின்றால் வெற்றி பெறாது என எதிரணியினர் கடுமையாக சாடி வருகின்றனர். முன்னதாக விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூடுதல் தொகுதிகள் கேட்டு திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனாலும், அறிவாலயம் அமைதி காத்து வருகிறது. உங்கள் கருத்து?
News September 19, 2025
MP-க்கள் நிதியை ₹10 கோடியாக உயர்த்துக: CM ஸ்டாலின்

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஆய்வுக்கூடத்தில் அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு இதுவரை ₹13,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது எனவும், விவசாயிகளுக்கு நிதியுதவிகளை சேர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், எம்.பி தொகுதி நிதியை ₹10 கோடியாக உயர்த்தவும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.