News October 17, 2024

‘கொலுசு’ பின்னணியில் இப்படி ஒரு விஷயமிருக்கா?

image

சங்க காலந்தொட்டு காலில் வெள்ளி கொலுசு (சிலம்பு, தண்டம்) அணிவதை தமிழக பெண்கள் பின்பற்றி வருகின்றனர். இவ்வாறு அதை அணிவதன் பின்னணியில் என்னதான் இருக்கிறது என கேட்கிறீர்களா? உங்களுக்கான பதில் இதோ. பொதுவாக ஆற்றலை மீண்டும் கிரகித்துக் கொள்ளும் தன்மை வெள்ளிக்கு உள்ளது. மனித உடலில் இருக்கும் ஆற்றலானது கை & கால்கள் வழியாகவே வெளியேறும். அதனால்தான் பெண்கள் கால்களில் வெள்ளி கொலுசுகளை அணிந்து வருகின்றனர்.

Similar News

News September 3, 2025

BREAKING: தங்கம் விலை Record படைத்தது

image

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹640 உயர்ந்து ₹78,440-க்கும், கிராமுக்கு ₹80 உயர்ந்து ₹9,805-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒருகிராம் வெள்ளி விலை ₹137-க்கும், கிலோ வெள்ளி ₹1,37,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News September 3, 2025

ஓணம் பண்டிகை: சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

image

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஓணம் பண்டிகை வருகிற 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்படுகிறது. மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். 5-ம் தேதி திருவோண சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தொடர்ந்து 7-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

News September 3, 2025

TNPSC வினாத்தாளில் தவறு: நயினார் ஆவேசம்

image

ஐயா வைகுண்​டரை பற்றி TNPSC வினாத்தாளில், ‘God of hair cutting’ என்று இழி​வாகக் குறிப்​பிடப்​பட்​டதற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐயா வைகுண்டரை ‘முடிசூடும் பெருமாள்’ என மக்கள் அழைக்கும் நிலையில், மொழிப்பெயர்ப்பில் அவரது பெயர் இழிவுபடுத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். தன் தந்தை குறித்து இதேபோல் தவறாக குறிப்பிட்டால் CM பேசாமல் இருப்பாரா எனவும் கேள்வி எழுப்பினார்.

error: Content is protected !!