News October 26, 2025
தலையணையில் இப்படி ஒரு ஆபத்தா?

தலையணை இருந்தால் மட்டும்தான் இங்கு பலருக்கும் தூக்கம். தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று என தலையணை வைத்து தூங்குபவர்கள் பலர். ஆனால், Amerisleep பவுண்டேஷனின் ஆய்வில், தலையணை குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அடிக்கடி துவைக்காத, அழுக்குப் படிந்த தலையணை உறைகளில், டாய்லெட் சீட்டில் உள்ளதைவிட 17,000% கிருமிகள் உள்ளதாம். இதனால் சரும பிரச்னைகள் உள்பட பல பாதிப்புகள் ஏற்படுமாம்.
Similar News
News October 26, 2025
அதிமுக கைகட்டி வேடிக்கை பார்க்காது: EPS

சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தனியார் கட்டுமான நிறுவனம் குடியிருப்புகளை கட்ட அரசு அனுமதி கொடுத்துள்ளதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு அரணாக இந்த சதுப்பு நிலங்கள் திகழ்வதாகவும், மக்களின் உயிரோடு திமுக அரசு விளையாடுவதை ஏற்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், இதை அதிமுக கைகட்டி வேடிக்கை பார்க்காது என்றும் கூறியுள்ளார்.
News October 26, 2025
பாத்ரூமில் அக்கா, தங்கை பலி.. சாவு இப்படியா வரணும்

கர்நாடகாவில் பாத்ரூமில் இருந்த கேஸ் கீசரில், LPG கேஸ் கசிந்து, அதை சுவாசித்த குல்ஃபாம், தாஜ் என்ற 2 சகோதரிகள் உயிரிழந்துள்ளனர். நீங்கள் இதை பயன்படுத்துகிறீர்கள் என்றால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். யூனிட் வெளியே நிறுவப்பட வேண்டும், பயன்பாட்டில் இல்லாத போது ஆஃப் செய்ய வேண்டும், கேஸ் கசிகிறதா என அடிக்கடி சோதிக்கவும் கூறுகின்றனர்.
News October 26, 2025
உங்கள் மகளுக்கு இந்த பிரச்னை இருக்கா?

தற்போது இருக்கும் வாழ்வியல் முறை, உணவு பழக்கங்களால் பருவமடைந்த உடன் பிள்ளைகளுக்கு மாதவிடாய் பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை பற்றிய போதிய அறிவு பள்ளியில் படிக்கும் அவர்களுக்கு இருக்காது என்பதால், பெற்றோர்கள்தான் கவனிக்கணும். உங்கள் பிள்ளைக்கு மாதவிடாய் தள்ளிப்போவது, முகங்களில் முடி, அதீத வலி, ரத்தசோகை போன்ற பிரச்னைகள் இருக்கா என்பதை தெரிஞ்சிக்கோங்க. டாக்டரை அணுகினால் சீக்கிரமே சரி செய்யலாம். SHARE.


