News September 18, 2025
ஒரு சிகரெட்டுக்குள் இவ்வளவு ஆபத்தா?

ஒரு சிகரெட்டில் இருக்கும் கெமிக்கல்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என பாருங்க *Butane- லைட்டர் எரிவாயு *Toulene- பெயிண்ட் *Ammonia- டாய்லெட் கிளீனர் *Methanol- ராக்கெட் எரிவாயு *Carbon Monoxide- காரின் சைலென்சர் *Cadmium- பேட்டரி *Stearic acid- மெழுகுவர்த்தி. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் ஆபத்தானதாகும். எனவே, உடனே சிகரெட்டை கைவிடுங்க. இதனை நண்பர்களுக்கும் பகிருங்க.
Similar News
News March 5, 2026
மா.செ.க்களிடம் தனித்தனியாக ஆலோசித்த இபிஎஸ்

அதிமுக மா.செ.க்களை தனித்தனியாக தனது வீட்டிற்கு அழைத்து EPS ஆலோசனை நடத்தியுள்ளார். குறிப்பாக, இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை மா.செ.களிடம் கொடுத்து, யார் யாருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கலாம் என்பது குறித்து கருத்துகளை கேட்டிருக்கிறார். மேலும், தெருமுனை கூட்டணிகளை நடத்துவதோடு, துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து, திமுகவிற்கு எதிரான கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லவும் அறிவுறுத்தியிருக்கிறார்.
News March 5, 2026
ராஜ்யசபா வேட்பாளராக அன்புமணி போட்டி

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 1 சீட் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், பாமக வேட்பாளராக அன்புமணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றே வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாள் என்பதால், காலை 10.30 மணிக்கு அவர் வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளார். ஏற்கெனவே, அதிமுக கூட்டணியில் அன்புமணி ராஜ்யசபா MP-யாக இருந்துள்ளார். 2004-ல் திமுக கூட்டணியில் MP & மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
News March 5, 2026
தவெகவுடன் கூட கூட்டணி வைப்போம்: மன்சூர் அலிகான்

விஜய்யுடன் கூட கூட்டணி அமைப்போம் என்று இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். விஜய்க்கு வரும் கூட்டத்தை தான் பார்க்கிறேன் என்ற அவர், தவெகவுக்கு தான் ஆதரவளிப்பேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து விரைவில் விஜய்யை சந்தித்து கூட்டணி நிலைப்பாட்டை மன்சூர் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. மன்சூர், 2024 தேர்தலில் வேலூரில் சுயேட்சையாக போட்டியிட்டார்.


