News October 11, 2025
பிரஸ்மீட்டில் பெண்களுக்கு இடமில்லையா?

டெல்லியில் நேற்று நடந்த தாலிபன் அமைச்சர் அமீர் கான் முத்தகியின் செய்தியாளர்கள் சந்திப்பில், பெண் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மண்ணில் தாலிபன்களின் பெண் ஒதுக்கல் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆப்கனில் பெண்கள் படிக்கவும், வேலை செய்யவும், பொதுவெளியில் நடமாடவும் தாலிபன்கள் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 11, 2025
இதெல்லாம் டைனோசரை விட பழசாம்..

உலகின் பழமையான உயிரினமாக கருதப்படும் டைனோசர்கள், சுமார் 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியுள்ளன. ஆனால் சில உயிரினங்கள் டைனோசர்களுக்கு முன்பே தோன்றியுள்ளன. இதை விட ஆச்சரியம் என்னவென்றால், அந்த உயிரினங்கள், தற்போதும் பூமியில் வாழ்ந்து வருகின்றன. அவை எந்தெந்த உயிரினங்கள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்க. உங்களை ஆச்சரியப்படுத்திய உயிரினம் எது?
News October 11, 2025
BREAKING: கரூர் துயர வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு

கரூர் துயர வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி தவெக உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளில் அக்.13(திங்கள்) அன்று தீர்ப்பளிக்கப்படும் என SC அறிவித்துள்ளது. சிறப்புக் குழு விசாரணையில் நம்பிக்கையில்லை என்றும் சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் தவெக தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்குகளின் விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், நாளை மறுநாள் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. விஜய்க்கு சாதகமான தீர்ப்பு வருமா?
News October 11, 2025
30 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

இரவு 7 மணி வரை நீலகிரி, கோவை, திண்டுக்கல், தென்காசி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, தி.மலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருப்பூர், மதுரை, தேனி, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், சேலம், கரூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடியில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. கவனமா இருங்க ப்ரெண்ட்ஸ்!