News December 10, 2024
நீங்க குடிக்கிற டீயில இஞ்சி இருக்கா?

இஞ்சி டீயில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சுவாச பிரச்னைகளை எதிர்த்து போராடுவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் செரிமானத்தை தூண்டுவதற்கு இஞ்சி டீ சிறந்த காரணியாக உள்ளது. குமட்டல் மற்றும் வாந்தியை தடுக்கும் தன்மை இதில் அதிகம் உள்ளது.
Similar News
News March 28, 2026
எரிபொருள் தட்டுப்பாடு.. மாம்பழ விவசாயிகள் கவலை

கோடைக்காலம் வந்தாலே மாம்பழ சீசனும் வந்துவிடும். அந்தவகையில், இந்தாண்டு மாம்பழ சீசன் தொடங்கிவிட்டது. சேலம் உள்ளிட்ட பகுதிகளில் மாம்பழ விளைச்சலும் அதிகரித்துள்ளதால், விற்பனை அமோகமாக இருக்கும் என்று விவசாயிகள், வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். அதேநேரம், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு (அ) லாக் டவுன் ஏற்பட்டால் மாம்பழ விற்பனையில் பாதிப்பு ஏற்படுமோ என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.
News March 28, 2026
BREAKING: தோனிக்கு காயம்!

தோனியை விரைவில் கிரவுண்டில் பார்க்கலாம் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ் ஒன்று வந்துள்ளது. பயிற்சியின் போது, அவருக்கு கெண்டைக்கால் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாம். இதனால், அடுத்த 15 நாள்களுக்கு ரெஸ்ட்டில் இருப்பார் என்றும், வரும் 30-ம் தேதி RR-க்கு எதிரான மேட்ச்சில் விளையாடமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன், தோனி <<19438278>>தாங்கி தாங்கி<<>> நடந்து வந்த வீடியோ வைரலானது.
News March 28, 2026
மார்ச் 30-ல் வேட்புமனு தாக்கல் செய்கிறாரா விஜய்?

முதல் முறையாக தேர்தலில் களமிறங்கும் விஜய், வரும் 30-ம் தேதி, மதியம் 12 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. தவெக வேட்பாளர்கள் அனைவரும் அன்றைய தினமே வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்த கையோடு, பெரம்பூரில் இருந்தே தன் பிரசாரத்தை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். <<-se>>#TNElection2026<<>>


