News January 22, 2025

IIT கேம்பஸ் இண்டர்வியூவில் சாதி பாகுபாடா? NCSC உத்தரவு

image

IIT-களில், கேம்பஸ் இண்டர்வியூவ்களில், சாதிப் பாகுபாடு காட்டப்படுவதாக கடந்த ஆண்டு தீரஜ் சிங் என்பவர் புகார் அளித்திருந்தார். மாணவர்கள் தங்களின் சாதிப் பெயரை சொல்லும்படி கட்டாயப்படுத்தப் படுவதாக அதில் கூறப்பட்டது. இதை விசாரித்த NCSC ஆணையம், இதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 15 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க டெல்லி, மும்பை IIT மற்றும் கல்வித்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Similar News

News November 21, 2025

SA tour of India: தெ.ஆப்பிரிக்க ODI, T20 Squad அறிவிப்பு

image

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தெ.ஆப்பிரிக்க அணி 2 டெஸ்ட், 3 ODI, 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் தெ.ஆப்பிரிக்கா வென்ற நிலையில், 2-வது டெஸ்ட் நாளை கவுஹாத்தியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ODI & T20 போட்டிகளுக்கான அணியினை தெ.ஆப்பிரிக்கா அறிவித்துள்ளது. ODI போட்டிகளை டெம்பா பவுமா தலைமையிலும், T20 போட்டிகளை எய்டன் மார்க்ரம் தலைமையிலும் விளையாடவுள்ளது.

News November 21, 2025

BREAKING: விஜய்க்கு பிரேமலதா ஆதரவு.. திடீர் திருப்பம்

image

நேற்று முளைத்த <<18343358>>காளான்கள்<<>> எல்லாம் CM ஆக ஆசைப்படுவதாக பிரேமலதா கூறியது விஜய்யை தான் என கூறப்பட்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக, தான் கூறியது விஜய்யை அல்ல என பிரேமலதா விளக்கமளித்துள்ளார். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவோரை தாங்கள் (தேமுதிக) கூத்தாடி என கூறவில்லை எனவும் விஜய்க்கு எப்போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தவெக – தேமுதிக கூட்டணி உருவாகுமா?

News November 21, 2025

டைட்டானிக் கம்மலை நினைவிருக்கிறதா?

image

காதோரமாய் கன்னங்களை உரசும் சிறு முடிகளுக்கு மத்தியில் கம்மல் நடனமாடுவதை ரசிப்பதே தனி அழகு. அதிலும், சற்று தலையை திருப்பும்போது கம்மல் நடனமாடினால் அது பேரழகாக இருக்கும். அந்த பேரழகை அளித்து, பெண்களை மேலும் அழகாக்கியது தான் ‘டைட்டானிக் கம்மல்’. சற்று நீண்ட செயினின் இறுதியில் மிளிரும் கல்லைக் கொண்ட இந்த கம்மலை ரசிக்காதவர்களே கிடையாது. டைட்டானிக் கம்மலை பார்த்ததும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?

error: Content is protected !!