News October 30, 2025
திருப்பதி சால்வை கொள்முதலில் முறைகேடா?

திருப்பதி கோயிலுக்கு வரும் VVIP-களுக்கு சால்வை அணிவிப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், இந்த சால்வை கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ₹400 மதிப்புள்ள சால்வையை ₹1,300-க்கு வாங்கியதாக கணக்கு காட்டி, ₹50 லட்சம் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக புலனாய்வு விசாரணை நடத்த, கோயில் அறங்காவலர் குழு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News October 30, 2025
ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்!

சபரிமலை சீசனை முன்னிட்டு, நவ.16 முதல் ஜன.16 வரை சிறப்பு பஸ்களை அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை (கோயம்பேடு & கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் முதல் Non AC sleeper வசதி கொண்ட பஸ்கள் வரை இயக்கப்படவுள்ளன. டிச.27 முதல் 30 வரை கோயில் நடை சாத்தப்படுவதால், டிச.26 முதல் டிச.29 வரை இந்த பஸ்கள் இயக்கப்படாது.
News October 30, 2025
சற்றுமுன்: 104 பேர் மரணம்

இஸ்ரேலுக்கும் காசாவிற்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் மீறப்பட்டுள்ளது. காசா மீது இஸ்ரேல் குண்டுகளை மழை பொழிந்துள்ளது. இந்த கொடூர தாக்குதல்களில் அப்பாவி 104 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 250 பேர் காயமடைந்தனர். ஹமாஸ் தனது சிப்பாயை கொன்ற பிறகு பயங்கரவாதக் குழுக்களை தாக்கியதாக இஸ்ரேல் அறிவித்தது. ஆனால், இந்த குற்றசாட்டுகளை ஹமாஸ் அமைப்பு மறுத்துள்ளது.
News October 30, 2025
‘ஜனநாயகன்’ பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. தீபாவளிக்கு படத்தின் அப்டேட் ஏதாவது கிடைக்கும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், கரூர் சம்பவத்தால் எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், நவம்பர் முதல் வாரத்தில் பர்ஸ்ட் சிங்கிளை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


