News October 29, 2025
பணி நியமனத்தில் முறைகேடா? அமைச்சர் நேரு விளக்கம்

நகராட்சி நிர்வாக துறையில் <<18136226>>2,538 பேரிடம் பணம்<<>> வாங்கி கொண்டு பணி வழங்கியதாக கூறிய ED-ன் புகாரை அமைச்சர் KN நேரு மறுத்துள்ளார். அவரது விளக்கத்தில், *அரசுக்கு களங்கம் ஏற்படுத்த ED பொய் கூறுகிறது. *20.9.2024-ல் முறைப்படி அண்ணா பல்கலை., மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மூலம் முறையாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். *தேர்வர்கள் தரப்பில் யாரும் புகார் அளிக்கவில்லை.
Similar News
News October 29, 2025
அதுக்கு ஆபாச படங்களை எடுக்கலாம்: பேரரசு

‘டியூட்’ படத்தை இயக்குநர் பேரரசு மறைமுகமாக விமர்சித்துள்ளார். எந்த படங்களை எடுத்தாலும், அதன் நோக்கம் நல்லதாக இருக்க வேண்டும் எனவும், கலாச்சார சீரழிவு படங்களை எடுப்பதை விட ஆபாச படங்களை எடுப்பது எவ்வளவோ மேல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கலாச்சார சீரழிவு படங்களை எடுத்து மக்களை கெடுக்க வேண்டாம் எனவும், பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்கிறது என்றும் பொங்கியுள்ளார்.
News October 29, 2025
BREAKING: விஜய் அதிரடி முடிவு.. அதிமுக அதிர்ச்சி

கரூர் துயர சம்பவத்திற்கு பின் அதிமுக – தவெக கூட்டணி அமையக்கூடும் என யூகங்கள் எழுந்தன. அதிமுக பரப்புரையில் தவெக கொடி பறந்தது அதற்கு மேலும் வலுசேர்த்தது. இந்நிலையில், 2026 தேர்தலில் தனித்து களம் காணவே விஜய் முடிவு செய்துள்ளார். தவெக கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என <<18140418>>CTR நிர்மல் குமார்<<>> விளக்கம் அளித்துள்ளார். திமுக, பாஜகவோடு கூட்டணி இல்லை என விஜய் உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
News October 29, 2025
மழைக்கால சுற்றுலா தலங்கள்

மழைக்காலத்தின்போது பசுமையான இயற்கை, மூடுபனி மலைகள் மற்றும் அருவிகளுடன் எழில் மிகுந்து காணப்படும். இயற்கை அதிசயங்களையும், கலாச்சாரத்தையும் கலந்து அனுபவிக்க, இந்தியாவில் ஏராளமான சிறந்த இடங்கள் உள்ளன. கண்களையும், மனதையும் வசீகரிக்கும் இடங்களை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு பிடித்த இடம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.


