News March 17, 2025
அதிமுகவில் பிளவா? இபிஎஸ் பதில்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ்சிடம் அதிமுகவில் பிளவு ஏற்படப் போவதாக வெளியாகும் செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அதிமுகவில் பிளவு எதுவும் இல்லை என்று கூறினார். தாம் முதல்வரானது முதல் அதிமுகவை உடைக்க முயற்சி நடந்ததாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும், அதிமுகவை உடைக்க நினைப்பவர்கள்தான் உடைந்து போவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Similar News
News March 17, 2025
திருப்பதி கோயில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…!

ஒருமுறை சென்றால் மீண்டும் மீண்டும் செல்லத் தோன்றும் கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயில். அங்கு ஜூனில் நடைபெறும் சுப்ரபாதம், அஷ்டதல பாத பத்மாராதனை உள்ளிட்ட சேவைகளுக்கான தரிசன டிக்கெட் பெற நாளை (மார்ச் 18) முதல் மார்ச் 20 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பக்தர்கள் டிக்கெட்டை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 17, 2025
ரூ.21,370 கோடி சொத்துகள் பறிமுதல்… அம்மாடியோவ்!

2024-2025ம் நிதியாண்டில் ஏப்ரல்- டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் ரூ.21,370 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. மத்திய நிதியமைச்சகத்திடம் உள்ள புள்ளி விவரங்களில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9 மாதங்களில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட நபர்களுக்கு ரூ.4,198 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
News March 17, 2025
இஸ்லாமிய தீவிரவாதத்தை முறியடிக்க டிரம்ப் உறுதி: துளசி

இஸ்லாமிய தீவிரவாதத்தை முறியடிக்க டிரம்ப் உறுதிபூண்டு இருப்பதாக USA உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி பெண்ணான துளசி கப்பார்ட் டெல்லி வந்துள்ளார். அங்கு அவர் அளித்த பேட்டியில், இஸ்லாமிய தீவிரவாதத்தால் இந்தியா, வங்கதேசம், மத்திய கிழக்கு நாடுகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறினார். இது மிகப்பெரிய அச்சுறுத்தல், இது முறியடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.