News December 13, 2024

QR CODE லிங்க் வருகிறதா? ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

image

QR CODE லிங்க் ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் வழக்கம் கொண்டோருக்கு ரிசர்வ் வங்கி முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. பணம் அனுப்ப மட்டுமே QR CODE ஸ்கேன் செய்ய வேண்டும். பணத்தை பெற ஸ்கேன் செய்யத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அறிமுகம் இல்லாத எண் அல்லது நபரிடம் இருந்து QR CODE லிங்க் வந்தால் அதை ஸ்கேன் செய்யக்கூடாது. பணத்தை பெற ஓடிபி, லிங்க் அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளது.

Similar News

News August 9, 2025

இந்திய அணிக்கு குட் நியூஸ்

image

இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் காயத்தில் இருந்து மீண்டுவிட்டதாக தெரிகிறது. இதனால், அடுத்த மாதம் தொடங்க உள்ள ஆசிய கோப்பை தொடரில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பயிற்சியில் ஈடுபடும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. முன்னதாக, ஜெர்மனியில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் NCA-ல் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பில் இருக்கிறார்.

News August 9, 2025

ராமருக்கு போல் சீதாவுக்கும் பிரமாண்ட கோயில்: அமித்ஷா

image

பீஹார் மாநிலத்தில் சீதாதேவியின் பிறப்பிடமாக கருதப்படும் சீதாமர்ஹியில் உள்ள புனவ்ராதாம் பகுதியில் ஜானகி மந்திர் கோயில் உள்ளது. சீதாதேவியின் கோயிலாக இது கருதப்படுகிறது. அயோத்தியாவில் ராமருக்கு பிரம்மாண்ட ஆலயம் அமைக்கப்பட்டது போல், தற்போது இக்கோயிலை ₹882.87 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்வதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் அமித்ஷா பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

News August 9, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 9 – ஆடி 24 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: திதித்துவம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை.

error: Content is protected !!