News November 25, 2024
அமைகிறதா குடியரசுத் தலைவர் ஆட்சி?

மகாராஷ்டிராவில் நாளையுடன் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனால், உடனடியாக ஆட்சியமைக்க வேண்டிய கட்டாயத்தில் BJP உள்ளது. ஆனால், இதுவரை கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவு பெறாததால் இன்னும் முதல்வர் தேர்வு செய்யப்படவில்லை. இதனால், புதன்கிழமை ஜனாதிபதி ஆட்சி அமையலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அதேநேரம், சில நாள் அவகாசம் அளிக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்றும் சொல்லப்படுகிறது.
Similar News
News November 27, 2025
விவசாயிகளுக்கு ₹31,500 மானியம் வழங்கும் அரசு திட்டம்!

பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ₹31,500 வரை மானியம் என 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. அத்துடன் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சியும் இலவசமாக வழங்கப்படும். இதற்கு, குறைந்தது 1 முதல் 5 ஏக்கர் நிலம் இருக்கவேண்டும். இயற்கை விவசாயத்துக்கு மாற விரும்புபவர்கள் <
News November 27, 2025
அடுத்த தலைவர் தவெகவில் இணைந்தார்

செங்கோட்டையனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த Ex MLA-வும், பாஜக நிர்வாகியுமான வெங்கடாஜலம் தவெகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் MLA, மா.செ.,வாக இருந்த இவர், 2023-ல் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது அங்கிருந்து விலகி தவெகவுக்கு தாவியுள்ளார். KAS கட்சியில் இணையும் நிகழ்ச்சியில்தான் இவரும் இணைந்தார். எனவே, இவரையும் செங்கோட்டையன் தான் தவெகவுக்கு அழைத்து சென்றாரா என கேள்வி எழுந்துள்ளது.
News November 27, 2025
₹48,000 சம்பளம்.. 750 பணியிடங்கள்: APPLY

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் காலியாகவுள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி (LBO) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: டிகிரியுடன் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: 20 – 30. சம்பளம்: ₹48,480 – ₹85,920. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.1. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <


