News December 29, 2024
செல்போனில் நெட்வொர்க் பிரச்னையா? இத பண்ணுங்க

போனில் சிக்னல் இல்லை என தவிப்பவர்களுக்கு சில டிப்ஸ் ⇒ போன் சமீபத்திய சாஃப்ட்வேர் அப்டேட்டில் இருக்கிறதா என கவனியுங்கள் ⇒ நெட்வொர்க் ஸ்விட்ச்: போனில் செட்டிங்ஸ் – மொபைல் நெட்வொர்க் – SIM Management – Switch data connection during calls’ஐ தேர்ந்தெடுங்கள் ⇒ சிம் கார்டை அகற்றி, சிறிது நேரம் கழித்து மீண்டும் பொருத்தி முயற்சிக்கலாம் ⇒ ஏரோபிளேன் மோட் அல்லது Restart செய்து பாருங்கள்.
Similar News
News July 10, 2025
எலான் மஸ்க் நிறுவனத்துக்கு இந்தியா அனுமதி..!

இந்தியாவில் அதிவேக இணைய சேவை வழங்கும் வகையில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு 5 ஆண்டுகள் அனுமதியை IN-SPACE மையம் வழங்கி உள்ளது. இதன் மூலம் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் 4408 முதல் தலைமுறை செயற்கை கோள்கள் இந்திய வான் எல்லை பகுதியில் செயல்பட தொடங்கும் என்றும், இதனால் 600 Gbps வேகத்தில் இணைய சேவை பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 10, 2025
நெல்சன் மண்டேலா பொன்மொழிகள்

*என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் நான் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள். *மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று சமுதாயத்தை மாற்றுவது அல்ல – உங்களை நீங்களே மாற்றிக் கொள்வது. *பின்னால் இருந்து வழிநடத்துங்கள் – மற்றவர்கள் தாங்கள் முன்னால் இருப்பதாக நம்பட்டும்.*இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி.
News July 10, 2025
கனிமொழி, உதயநிதி எங்கே? திருப்புவனத்தில் சீமான் கேள்வி

இளைஞர் அஜித்குமார் மரணத்தை கண்டித்து திருப்புவனத்தில் நாதகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பேசிய சீமான், காவல் மரணமடைந்த பெனிக்ஸ், ஜெயராஜ் வீட்டுக்கு சென்ற உதயநிதியும், கனிமொழியும் ஏன் அஜித்குமார் வீட்டுக்கு வரவில்லை என கேள்வி எழுப்பினார். அப்போது அவர்கள் எதிர்கட்சியாக இருந்ததால் ஜெயராஜ் வீட்டுக்கு சென்றனர். இப்போது ஆளுங்கட்சி என்பதால் அஜித்குமார் வீட்டுக்கு செல்லவில்லை என விமர்சித்தார்.