News February 9, 2025
போன் பேசும் போது Background noise அதிகமா இருக்கா?

மார்க்கெட், பஸ் போன்ற கூட்டமான இடங்களில் இருந்து போன் செய்தால், எதிர் முனையில் இருப்பவர்களுக்கு நாம் பேசுவது பெரிதாக கேட்காது. இரைச்சல் தான் அதிகமாக இருக்கும். இதனைத் தவிர்க்க, சிம்பிள் டிப்ஸ் இருக்கு. உங்கள் போனில் Settingsல் Sound & Vibrations ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதில், Clear Voice or Clear Call optionஐ ஆன் செய்யவும். அவ்வளவு தான். Background noise குறைந்து விடும். SHARE IT.
Similar News
News September 8, 2025
நாஞ்சில் விஜயன் மீது PHOTO ஆதாரத்துடன் திருநங்கை புகார்

விஜய் டிவி-யின் ‘கலக்கப்போவது யார்’ ஷோ மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன். இந்த நிலையில், தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றிவிட்டதாக அவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், புகைப்பட ஆதாரங்களுடன் திருநங்கை புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால், அவர் யார் என்றே தெரியாது என நாஞ்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 8, 2025
ஆதாரை 12வது ஆவணமாக ஏற்க வேண்டும்: SC

வாக்காளர் பட்டியலில் ரேஷன் கார்டு உள்ளிட்ட 11 ஆவணங்கள் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 12-வது ஆவணமாக ஆதாரை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என SC உத்தரவிட்டுள்ளது. ஆதாரை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆதாரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான வழிமுறை வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.
News September 8, 2025
காசு கொடுத்தாலும் EPS வெற்றி பெற முடியாது: கருணாஸ்

தன்னுடைய சுயநலத்திற்காக அதிமுகவை படுகுழியில் தள்ளும் வேலையில் EPS ஈடுபட்டுள்ளதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகருமான கருணாஸ் விமர்சித்துள்ளார். 2026-ல் ஓட்டுக்கு ₹2000 கொடுத்தாலும் EPS வெற்றி பெறுவது கடினம் என்றும் ஜெயலலிதாவின் கனவை அவர்(EPS) அழித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். செங்கோட்டையனை பொறுப்புகளில் இருந்து நீக்கியதால், கொங்கு மண்டல மக்கள் கோபத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.