News March 28, 2025

சிபில் ஸ்கோர் கம்மியா இருக்கா? கவலைய விடுங்க

image

சிபில் ஸ்கோர் 650-க்கு கீழே இருந்தால் வங்கிகளில் கடன் வாங்குவது கடினம். ஆனால், சில டிப்ஸ்களை பயன்படுத்தி இதை சமாளிக்க முடியும். 1) நல்ல சிபில் ஸ்கோர் உள்ளவரை CO APPLICANTஆக சேர்த்தால், கடன் பெற வாய்ப்பு அதிகம். 2) தங்கம், சொத்து, டெபாசிட் போன்றவற்றை உத்தரவாதமாக வைத்து கடன் வாங்கலாம். 3) சிறிய கடன் தொகைக்கு விண்ணப்பிக்கவும். 4) வங்கி கடன் தராவிடில் உடனடி கடன் நிறுவனங்களை தேர்ந்தெடுக்கலாம்.

Similar News

News March 31, 2025

103 மருந்துகள் தரமற்றவை

image

நாட்டில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 103 மருந்துகள் தரமற்றவை என்று மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இவை தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது. தரமற்ற மருந்துகளை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News March 31, 2025

இதுக்கு காரணமும் 90s கிட்ஸ் தான்!

image

ஜப்பான் கார்ட்டூன் வடிவமான Ghibli ட்ரெண்டால் உலகமே திக்குமுக்காடி வருகிறது. 1985ல் தொடங்கப்பட்ட Studio Ghibliயின் கார்ட்டூன்கள் இன்று ட்ரெண்டடிக்க, 90ஸ் கிட்ஸும் ஒரு காரணமே. ஆம், இந்த கார்ட்டூன்களுக்கு 90களிலும், 2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலும், 90ஸ் கிட்ஸ் ஏகோபித்த வரவேற்பை அளித்தனர். அதன் காரணமாக, புதுசா Gen Zக்கு ஏதாவது ட்ரெண்டு கொடுக்க நினைத்த AIயும், Ghibliயை கையில் எடுக்க வைத்துள்ளது.

News March 31, 2025

ஜம்மு காஷ்மீரில் வந்தே பாரத்.. ஏப்ரலில் தொடங்கி வைக்கும் PM

image

ஜம்மு காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் ரயில் சேவையை ஏப்ரல் 19ஆம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் இந்த தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஜம்மு – காத்ரா – ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த ரயில் சேவை இயக்கப்படுகிறது. 272 கி.மீ. தொலைவை கொண்ட ரெயில் சேவை திட்டத்திற்கான பணியானது கடந்த மாதம் நிறைவடைந்தது.

error: Content is protected !!