News April 21, 2025

வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுக்கு தடையா?

image

கொல்கத்தா மைதானத்தில் பிட்ச் குறித்து வர்ணனையாளர்கள் ஹர்ஷா போக்லேயும், சைமன் டவுலும் தெரிவித்த கருத்து சர்ச்சையானது. KKR அணிக்கு சாதகமாக இல்லாத கொல்கத்தா மைதானத்தில் இருந்து வேறு இடத்துக்கு அவர்கள் மாற வேண்டும் என இருவரும் தெரிவித்திருந்தனர். இதனால் இருவரும் இனி கொல்கத்தாவில் நடக்கும் போட்டிகளில் வர்ணனை செய்ய தடை கோரி பெங்கால் கிரிக்கெட் சங்கம் BCCI-க்கு கடிதம் எழுதியுள்ளது.

Similar News

News September 10, 2025

ஆசிய கோப்பையில் சதம் அடிக்க போகும் இந்தியர் யார்?

image

ஆசிய கோப்பையில் IND vs UAE போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. இந்தியாவுடன் ஒப்பிடும் போது UAE மிகச்சிறிய அணிதான். இந்திய அணியில் அதிரடி வீரர்கள் வரிசைகட்டி நிற்பதால், இன்று யாராவது ஒருவர் சதம் அடிக்க வாய்ப்புள்ளது. 2022 ஆசிய கோப்பையில் விராட் கோலி சதமடித்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு சாம்பியனான இந்தியாவே இம்முறையும் கோப்பையும் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

News September 10, 2025

உலகை விட்டு மறைந்தார்.. விஜயகாந்த் குடும்பம் கண்ணீர்

image

விஜயகாந்தின் உடன் பிறந்த சகோதரி விஜயலெட்சுமி(78) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு மாலை அணிவித்து பிரேமலதா, சுதீஷ், விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். சொந்த ஊரான மதுரை மூலக்கரைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு ஊர் மக்கள், தேமுதிக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, விஜயலெட்சுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

News September 10, 2025

அதிமுகவில் பிரச்னை இல்லை: EPS

image

திமுக கூட்டணி தானாகவே உடைந்துவிடும் என தனது பரப்புரையில் EPS தெரிவித்துள்ளார். அதேநேரம், அதிமுக உடைந்துவிட்டதாக கூறுவது உண்மையில்லை என குறிப்பிட்ட அவர், கட்சி ஒன்றுபட்டே இருப்பதாகவும் விளக்கம் கொடுத்தார். திமுகதான் ICU-வுக்கு செல்லப்போகிறது என தெரிவித்த EPS, அதிகார திமிரில் பேசுவதை உதயநிதி நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!