News September 16, 2025
தீபாவளிக்கு 4 நாள்கள் விடுமுறையா? REQUEST

அக்.20-ல் திங்களன்று தீபாவளி வருவதால் 3 நாள்கள் தொடர் விடுமுறை. இந்நிலையில், கடந்த ஆண்டைபோல் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்குமாறு ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடைசி நேரத்தில் அறிவிக்காமல், முன்னரே அறிவித்தால் ஊர்களுக்குச் செல்ல டிக்கெட் புக்கிங் செய்ய வசதியாக இருக்கும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இதனை பரிசீலித்து அரசு விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளது. SHARE
Similar News
News September 16, 2025
உங்கள் குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்கணும் தெரியுமா?

குழந்தைகளிடையே ஃபோன் பயன்பாடு அதிகரித்துவிட்டதால், இரவெல்லாம் தூங்காமல் ரீல்ஸ் பார்க்கின்றனர். இதனால் அவர்களது மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுவதிலிருந்து, பார்வை குறைபாடு, மனநிலை மாற்றம், நரம்பியல் பிரச்னை என அனைத்தும் வருகிறது. இதனை தடுக்க, 6-12 வயதுக்குட்பட்டவர்கள் 1 நாளைக்கு குறைந்தபட்சம் 9 மணி நேரம் தூங்க டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். பிற பெற்றோர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க.
News September 16, 2025
பிங்க் பஸ் தான் வெற்றி பெறும்: உதயநிதி ஸ்டாலின்

EPS, விஜய்யை மறைமுகமாக தாக்கி உதயநிதி ஸ்டாலின் பேசியது வைரலாகிறது. சேலத்தில் பேசிய அவர், ஒருவர் பச்சை நிற பஸ்ஸில் செல்கிறார், மற்றொருவர் மஞ்சள் நிற பஸ்ஸில் செல்கிறார், ஆனால் கடைசியில் விடியல் பயணத்தில் மகளிர் பயணம் செய்யும் பிங்க் நிற பஸ் தான் அனைவரையும் ஓவர்டேக் செய்து வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார். குடும்ப அரசியல் என்று இருவரும் விமர்சிக்கும் நிலையில், உதயநிதி இவ்வாறு கூறியுள்ளார்.
News September 16, 2025
போன் உங்களை உளவுப் பார்க்கிறதா?

நீங்கள் எங்கே செல்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பதையெல்லாம், உங்கள் போன் மூலமே மோசடியாளர்கள் உளவுப் பார்க்க முடியும். இதை தவிர்க்க: *போன்களில் ஆப்களுக்கு லொக்கேஷன் அனுமதியை தவிர்க்கலாம் *நம்பகமல்லாத Caller ID, Spam protection ஆப்களை தவிர்க்கவும் *வை-பை, புளூடூத் ஆட்டோ கனெக்ஷனை / டிடெக்ஷனை ஆப் செய்யவும் *NFC, Contactless payments-ஐ ஆஃப் செய்யவும் *மெசேஜில் Link preview-ஐ Disable செய்யவும்.