News March 20, 2025

‘குட் பேட் அக்லி’யில் 2 அஜித்தா? – ஆதிக் கொடுத்த அப்டேட்!

image

குட் பேட் அக்லி பட டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் அனைத்தும் இணையத்தில் பட்டையை கிளப்பியதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில், வார இதழுக்கு இயக்குநர் ஆதிக் அளித்த பேட்டியில், அப்பாவுக்கும் மகனுக்குமான பிணைப்பு படத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். டீசரில் இளமையான, வயதான தோற்றங்களில் அஜித் இருந்ததால், அவர் 2 கதாபாத்திரங்களில் நடித்திருப்பாரோ என ரசிகர்கள் முணுமுணுக்கின்றனர்.

Similar News

News July 7, 2025

நாகையில் ஊராட்சிக்கு ரூ.1 கோடி பெற அழைப்பு!

image

நாகை மாவட்டத்தில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிக்கு விருது மற்றும் ரூ.1 கோடி தமிழக அரசால் அளிக்கப்பட உள்ளது. தகுதியான ஊராட்சிகள் உரிய ஆவணங்களுடன் நாகை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன அலுவலகத்தில் வருகின்ற ஜூலை 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் பா. ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.

News July 7, 2025

8 இடங்களில் சதமடித்த வெயில்… கவனம் தேவை மக்களே!

image

தமிழகம், புதுச்சேரியில் வெப்பநிலை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இன்று சென்னை, வேலூர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 இடங்களில் வெயில் சதமடித்து (100 டிகிரி பாரன்ஹீட்) மக்களை வாட்டி வதைத்துள்ளது. இந்நிலையில், மேலும் 2 நாள்களுக்கு வெயில் 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது. இதனால், வீட்டில் இருந்து பகல் 11 மணி – மதியம் 3 வரை வெளியே செல்வதை தவிருங்கள் நண்பர்களே..!

News July 7, 2025

2001 தேர்தலை மறந்தாச்சா? திமுகவுக்கு EPS கேள்வி

image

பாஜகவுடன் கூட்டணி வைப்பதை விமர்சிக்கும் மு.க.ஸ்டாலினுக்கு, பழைய சம்பவம் மறந்துவிட்டதா எனக் கேட்டுள்ளார் இபிஎஸ். 1991-ல் பாஜகவோடு கூட்டணி வைத்தீர்களா இல்லையா? 2001 தேர்தலில் கூட்டணி வைத்தீர்களா இல்லையா? நீங்கள் கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி. நாங்கள் கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சியா? என்றதுடன், நாட்டுக்கு நல்ல திட்டங்கள் தரும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!