News July 30, 2024
சாலையோரம் 100 எண் குறியீடு போர்டு உள்ளதா?

சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் பல்வேறு குறியீடு போர்டுகள் வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். அதில், சிகப்பு வட்டத்திற்குள் மஞ்சள் வண்ண பின்னணியில் கருப்பு நிறத்தில் “100” எண் குறிப்பிடப்பட்டு இருக்கும் போர்டுக்கு என்ன அர்த்தம்? என தற்போது பார்க்கலாம். அந்த சாலையில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகம் வரை வாகனத்தில் செல்லலாம் என்பதையே அந்த போர்டு குறிக்கிறது.
Similar News
News December 16, 2025
IPL: எந்த அணியிடம் எவ்வளவு உள்ளது?

2026 IPL தொடருக்கான மினி ஏலம் இன்று (டிச.16) அபு தாபியில் நடைபெற உள்ளது. இதில், எந்த அணி, எந்த வீரரை, எவ்வளவு தொகைக்கு ஏலத்தில் எடுப்பார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் நிலவுகிறது. இந்நிலையில், எந்த அணியிடம் எவ்வளவு இருப்புத் தொகை உள்ளது என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 16, 2025
ஜோர்டன் அரசரின் அர்ப்பணிப்பை பாராட்டிய PM

அரசுமுறை பயணமாக ஜோர்டன் சென்றுள்ள PM மோடி, மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடனான கலந்துரையாடல் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக
தெரிவித்துள்ளார். இந்தியா – ஜோர்டான் உறவுகளில் மன்னரின் தனிப்பட்ட அர்ப்பணிப்பு முக்கியமானது எனவும் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 75 ஆண்டுகள் ராஜாங்க உறவு வரும் காலங்களில் புதிய ஆற்றலுடன் முன்னேற்றமடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 16, 2025
நாசருக்கு கலைஞர் விருதை வழங்கிய CM ஸ்டாலின்

சென்னையில் முத்தமிழ் பேரவையின் சார்பில் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் நாசருக்கு கலைஞர் விருதை வழங்கி CM ஸ்டாலின் கௌரவித்தார். பின்னர் பேசிய CM, கலைஞர் விருது பெறுவதற்கு நாசர் மிகமிக பொருத்தமானவர் என கூறினார். தொடந்து பேசிய நாசர் கலையை ஆழமாக பயன்படுத்த வேண்டும் என்ற பொறுப்பை இந்த விருது கொடுத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன்
தெரிவித்தார்.


