News August 14, 2025
100 Thug life-க்கு சமமா கூலி? கதறும் நெட்டிசன்கள்..

பெரிய ஹைப்புக்கு மத்தியில் கூலி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் தலைவர் மாஸ், அனிருத் பாட்டு தெறி என்றெல்லாம் கொண்டாடி கொளுத்தினாலும், இணையத்தில் FLOP என்ற ஹேஷ்டேக்குடன் தோல்விப் படம் என நெட்டிசன்கள் பதிவிட்டுவருகிறார்கள். படத்தில் சண்டை காட்சிகள் அதிகமாக வருவதாகவும், பழைய கதை, மிகப்பெரிய ஏமாற்றம் எனவும் கலவையான ரிவ்யூக்கள் வருகின்றன.
Similar News
News August 16, 2025
ஐ.பெரியசாமி வீட்டில் ED ரெய்டு: இதுதான் காரணம்

2006-10 வரை வீட்டு வசதித் துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ₹2.13 கோடி சொத்து சேர்த்ததாக DVAC வழக்குப் பதிந்தது. இதுதொடர்பான வழக்கை தள்ளுபடி செய்த திண்டுக்கல் கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்த HC, 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது. இதற்கு எதிராக SC-ல் அமைச்சர் மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில்தான் <<17421480>>ED<<>> சோதனை நடைபெற்று வருகிறது.
News August 16, 2025
இன்றும் தங்கம் விலை குறைந்தது

கடந்த ஒருவாரமாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹40 குறைந்து ₹74,200-க்கும், கிராமுக்கு ₹5 குறைந்து ₹9,275-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 8-ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ₹75,7600-ஆக இருந்த நிலையில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் சுமார் ₹1,520 குறைந்துள்ளது.
News August 16, 2025
ஆஸி., கிரிக்கெட் ஜாம்பவான் காலமானார்

ஆஸி., அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டனும், முதல் முழுநேர பயிற்சியாளருமான பாப் சிம்ப்சன் (89) காலமானார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கேப்டனாக பணியாற்றிய அவர், ஆஸி.,யின் தலைசிறந்த ஓபனர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். சிறந்த ஸ்லிப் ஃபீல்டர்களில் ஒருவராக இருந்த அவர், முதல் தர கிரிக்கெட்டில் 21,029 ரன்கள் குவித்ததுடன் தனது லெக் ஸ்பின் மூலம் 349 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.