News February 9, 2025

பாஜக, AAP இடையே வாக்கு வித்தியாசம் இவ்வளவு தானா?

image

டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் 2%க்கும் குறைவாகவே உள்ளது. பாஜக 45.56%, ஆம் ஆத்மி 43.57% வாக்குகளும் பெற்றுள்ளன. ஆனால், தொகுதி வாரியாக 26 இடங்கள் வித்தியாசம் உள்ளது. பாஜக 48 தொகுதிகளையும், AAP 22 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன. பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற முதல் 3 வேட்பாளர்களும் AAPஐ சேர்ந்தவர்கள் ஆவர்.

Similar News

News February 9, 2025

டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!

image

ஆஸி.யின் ஸ்மித் உலக கிரிக்கெட்டில் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 11 வீரர்களுடன் பார்ட்னர்ஷிப்பில் 200 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர், ரிக்கி பாண்டிங் 10 பேருடன் 200+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். மேலும், ஆஸி. அணிக்காக அதிக சதங்களை அடித்த வீரர் என்ற ரிக்கி பாண்டிங்(41) சாதனையையும் ஸ்மித்(36) நெருங்கி வருகிறார்.

News February 9, 2025

கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்; 10 பேர் பலி

image

அமெரிக்காவில் மாயமான பயணிகள் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் 10 பேர் உடல் சிதறி பலியாகினர். கடந்த 6ஆம் தேதி அலாஸ்காவிலிருந்து ரோம் நகருக்கு புறப்பட்ட விமானம் 39 நிமிடங்களில் ரேடார் தொடர்பை இழந்தது. மாயமான விமானம் ரோம் நகரிலிருந்து 55 கி.மீ தொலைவில் கடல்பகுதியில் பனிப்பாறையில் நொறுங்கி விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவில் கடந்த 10 நாட்களில் நிகழும் 3ஆவது விமான விபத்து இதுவாகும்.

News February 9, 2025

காலை உணவை Skip பண்றீங்களா?

image

காலையில் வேகமாக கிளம்பும் போது, அவசரத்தில் பலரும் உணவைத் தவிர்ப்பார்கள். ஆனால், அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஏனென்றால், இதன் காரணமாக, உடலில் சோம்பல், இரைப்பை பிரச்னைகள், ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமாம். மேலும், நாள் முழுக்க தீவிர பசி ஏற்படுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பிரச்னையும் வரலாம். இனி Skip பண்றதுக்கு முன்னாடி ஒரு வாட்டி யோசிங்க!

error: Content is protected !!