News April 28, 2025
இரட்டை இலை சின்னம் முடக்கம்?

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று OPS தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் EPS & OPS நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் விசாரணை நடைபெறுகிறது. இதில், அதிமுக சார்பாக C.V.சண்முகம் ஆஜராகியிருக்கிறார். மனுதாரர்கள் தரப்பில் O.P.ரவீந்திரநாத், K.C.பழனிசாமி ஆஜராகியிருக்கின்றனர்.
Similar News
News September 18, 2025
வருமான நிலையில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது: CEA

பின்தங்கிய வருமான நிலையிலிருந்து, நடுத்தரமான வருமான நிலைக்கு வந்ததில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதாக நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர் (CEA) நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். உலகில் வேறு எந்த இவ்வளவு பெரிய நாடும் சமூக, பொருளாதார மாற்றத்தை ஜனநாயக வழியில் முயற்சிக்கவில்லை என பெருமிதப்பட்டுள்ளார். நம்முடைய வெற்றி பெற்ற திட்டங்களிலிருந்தும் நாம் சிலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
News September 18, 2025
மறைந்த தலைவர்களை பலிகடா ஆக்காதீங்க: கிருஷ்ணசாமி

OPS, சசிகலா, தினகரன் ஆகியோரை சமாளிக்க முடியாமல் EPS திணறுகிறார் என்று கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். இதனை அரசியல் ரீதியாக மட்டுமே தீர்க்க வேண்டும் என்ற அவர், இதற்காக மறைந்த தலைவர்களை பலிகடா ஆக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க கோரி EPS, அமித்ஷாவிடம் கடிதம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 18, 2025
TNPSC குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியானது

செப்.28-ல் நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 மற்றும் 2A முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இங்கே <