News October 24, 2024

பணக்காரங்களுக்கு மட்டும்தான் கோவிலா?: நீதிமன்றம்

image

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் கூடுதல் கட்டண விவகாரத்தில், பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோவிலா என ஐகோர்ட் மதுரை கிளை காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. சாமி தரிசனத்திற்கு 1000, 2000 என வாங்கினால் ஏழைகள் எப்படி சாமி தரிசனம் செய்வார்கள் எனவும், ஏழைகள் சாமி கும்பிட கூடாதா எனவும் நீதிபதிகள் வினவியுள்ளனர். மேலும், அறநிலையத்துறை ஆணையர் பதில் மனுத்தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

Similar News

News January 18, 2026

RCB ஆல்-ரவுண்டர் U19 WC-ல் அசத்தல்

image

U19 WC-ல் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்த விஹான் மல்ஹோத்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இளம் ஆல்-ரவுண்டரான விஹான், IPL 2026 ஏலத்தில் RCB அணியால் ₹30 லட்சத்திற்கு வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

News January 18, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 584 ▶குறள்: வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங் கனைவரையும் ஆராய்வ தொற்று ▶பொருள்: தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.

News January 18, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!