News August 23, 2025
ரேஷன் கார்டுக்கு ₹5,000.. தமிழக அரசு வழங்குவது உறுதி?

<<17486137>>ரேஷன் கார்டுக்கு ₹5,000<<>> வழங்க TN முடிவு செய்திருப்பதாக 2 நாள்களாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து பேசிய கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர், தீபாவளி பரிசாக மோடி ஜிஎஸ்டி குறைப்பை வெளியிட இருப்பதால், அதற்கு போட்டியாக தமிழக அரசும் தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். பொங்கலுக்கு 2 மாதங்களுக்கு முன்பே தீபாவளி நேரத்தில் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்கும் அறிவிப்பை TN அரசு வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News April 11, 2026
OPS இதற்கு நிச்சயம் வருந்துவார்: RB உதயகுமார்

போடிநாயக்கனூர் இரட்டை இலை தொகுதி என்பதால் தான் OPS அங்கு ஜெயித்தார் என RB உதயகுமார் கூறியுள்ளார். அங்கிருக்கும் மக்களுக்கு இரட்டை இலை மட்டுமே தெரியும் என்ற அவர், வரும் தேர்தலில் மக்கள் தீர்ப்பை பார்த்துவிட்டு இரட்டை இலையை ஏன் மிதித்தோம் என OPS வருந்துவார் என்றார். மேலும், அதற்கான காலமும் நேரமும் வெகு தொலைவில் இல்லை எனவும் சவால் விட்டிருக்கிறார். <<-se>>#TNElection2026<<>>
News April 11, 2026
பிரபல நடிகர் மரணம்.. போதை ராணிக்கு 15 ஆண்டு சிறை!

பிரபல ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரி மரண வழக்கில் இந்திய வம்சாவளியான Ketamine Queen என அழைக்கப்படும் மாடல் அழகியான ஜஸ்வீன் சங்காவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023-ல் மேத்யூ பெர்ரி இறந்த வழக்கில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஜஸ்வீன் சங்காவுக்கு இந்த தண்டனை கிடைத்துள்ளது. தீர்ப்புக்கு முன்னர், தனக்கு கருணை காட்ட வேண்டும் என சங்கா மன்றாடியபோதும் அமெரிக்க கோர்ட் அதனை ஏற்கவில்லை.
News April 11, 2026
என்ன செய்கிறார் மாநிலத் தலைவர் நயினார்?

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் வரை, கமலாலயம், டெல்லி தலைமை அலுவலகம், பேட்டிகள் என விறுவிறுப்பாக இயங்கிவந்தார் நயினார். ஆனால், பட்டியல் வெளியான பிறகு, போட்டியிடும் சாத்தூர் தொகுதியிலேயே வாக்கு சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, நெல்லை, குமரியில் கட்சி கூட்டங்களில் மட்டும் பங்கேற்றுள்ளார். ஒரு மாநிலத் தலைவரின் இந்த சைலண்ட் பயணம், அரசியல் கவனம் பெற்றுள்ளது.


