News August 29, 2025
ரேஷன் கடை திறந்திருக்கா? ஃபோன்லயே தெரிஞ்சிக்கலாம்

ரேஷன் கடைக்கு செல்லும்போது சில சமயங்களில் நாம் கேட்கும் பொருள் இல்லை என கூறிவிடுவார்கள். இதுபோன்ற ஏமாற்றத்தை தவிர்க்க ஒரு SMS அனுப்பினால் போதும், ரேஷன் கடை திறந்திருக்கிறதா, என்னென்ன பொருள்கள் இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம். இதற்கு உங்களுடைய ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து, 8939922990, 9773904050 ஆகிய எண்களுக்கு PDS 101 அனுப்புங்கள். SHARE.
Similar News
News August 29, 2025
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித்ஷா

PM மோடியையும், அவரது மறைந்த தாயாரையும் காங்., தொண்டர்கள் தரக்குறைவாக விமர்சித்ததற்கு, ராகுல் காந்தியிடம் சிறிதளவேனும் மானம் இருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். PM மோடியின் தாயார் வறுமையில் குழந்தைகளை வளர்த்து, நாட்டிற்கு ஒரு வலிமையான தலைவரை கொடுத்துள்ளதாகவும், அவர்களை இழிவாக பேசியதை யாராலும் சகித்து கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
News August 29, 2025
தீயணைப்பு ஆணையத் தலைவர் சங்கர் ஜிவால்

இன்றுடன் ஓய்வு பெறவுள்ள தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தமிழக அரசு புதிய பொறுப்பு வழங்கியுள்ளது. தீயணைப்பு ஆணையத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 30 முதல் சட்ட ஒழுங்கு டிஜிபி ஆக பதவி வகித்து வந்தார். இன்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் வழியனுப்பு விழா நடைபெறவுள்ளது. தமிழகத்தின் புதிய டிஜிபி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News August 29, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களின் பெறப்பட்ட மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். விடுபட்டு போன தகுதியான மகளிர் அனைவருக்கும் வீடு தேடி மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். திட்டத்தில் ₹1,000 பெற தகுதியுள்ள மகளிரின் முதற்கட்ட பட்டியல் விரைவில் வெளியிட இருப்பதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.