News April 10, 2024
பிரதமரே இதற்கெல்லாம் கேரண்டி அளிக்கத் தயாரா?

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்; நீட் விலக்கு அளிக்கப்படும். கல்விக்கடன் ரத்து செய்யப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என உறுதியளிக்க தயாரா என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக, திருக்குறளை தேசிய நூலாக, ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்கச் சட்டம் இயற்றுவேன் என உறுதியளிக்க முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
Similar News
News January 18, 2026
வெற்றிக் கூட்டணியை பாமக அமைக்கும்: ராமதாஸ்

விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் வியூகம் குறித்து பாமகவின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், பாமக அமைக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதான் நாணயமான கூட்டணி என மக்கள் பேசுகின்ற அளவிற்கு கூட்டணி அமையும் என்றும், அப்படிப்பட்ட கூட்டணியை உருவாக்க தீவிரமாக முயன்று வருவதாகவும் கூறியுள்ளார்.
News January 18, 2026
தமிழ் திரைப்பட எடிட்டர் காலமானார்

‘டிஷ்யூம்’, ‘ரோஜாக்கூட்டம்’ ஆகிய படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய பீட்டர் பாபியா (58) காலமானார். நெஞ்சுவலியால் சிகிச்சை பெற்றுவந்த பாபியா, அவரது சொந்த ஊரான சேலம் அஸ்தம்பட்டியில் பஸ்ஸில் பயணித்துள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர், ஹாஸ்பிடல் சென்றபோது அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். பாபியாவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News January 18, 2026
விவசாயிகளுக்கான மதிப்பு குறைந்து வருகிறது: கார்த்தி

விவசாயிகளை இச்சமூகம் பெரிதாக அங்கீகரிப்பதில்லை என கார்த்தி கவலை தெரிவித்துள்ளார். உழவன் விருதுகள் விழாவில் பேசிய அவர், விவசாயிகளுக்கான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருந்தாலும், அவர்களுடைய உழைப்பு ஒருபோதும் நின்றுவிடவில்லை என கூறியுள்ளார். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி விவசாயிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோரை சமூகம் கொண்டாட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


