News January 21, 2025
இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயரா?

2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. அப்படியென்றால் தொடரில் கலந்து கொள்ளும் அனைத்து அணிகளும் ICC champions trophy 2025 பாகிஸ்தான் என ஜெர்சியில் பிரிண்ட் செய்ய வேண்டும். ஆனால், தற்போது அதற்கு இந்திய அணி மறுப்பு தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தெரிவித்துள்ளது. மேலும், இதில் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும், PCB ICCயிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
Similar News
News April 2, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News April 2, 2026
விஜய்க்கு ஆதரவாக கார்த்தி சிதம்பரம் ட்வீட்?

விஜய் தன் வேட்புமனுவில் <<19517005>> குடும்பத்தினருக்கே கடன்<<>> கொடுத்ததாக குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டி பலரும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், வேட்புமனு குறித்து கொந்தளிப்பவர்களே, தயவுசெய்து அமைதியாக இருங்கள் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். குடும்பத்தினருக்கு இடையேயான பரிவர்த்தனைகள் பொதுவாக கடன்களாகவே கருதப்படும். இல்லையெனில் அவை வருமானமாக கருதப்பட்டு வரி விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News April 2, 2026
ஈரானில் யார் ஆட்சி நடக்கிறது?

ஈரானில் தற்போது IRGC(இஸ்லாமிய புரட்சி காவல் படை) ஆட்சி நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி எங்கே இருக்கிறார் என்று தெரியாத நிலையில், IRGC ஒரு ‘மிலிட்டரி கவுன்சில்’ அமைத்து நாட்டின் முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறதாம். வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல், அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போன்றவற்றை அதிபரின் விருப்பமின்றி IRGC செய்வதாக கூறப்படுகிறது.


