News October 24, 2025
iPhone Air மாடல் இனி கிடைக்காதா?

ஐபோன் மாடல்களிலேயே மிகவும் மெலிதான iPhone Air மாடல் உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களில் அப்போன்கள் விற்றுத் தீர்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தாலும், அங்கும் விற்பனை மந்தமாகவே உள்ளது. அதனால், அதற்கு மாற்றாக, அதிக வரவேற்பை பெற்றுள்ள ஐபோன் 17 மற்றும் ஐபோன் 17 ப்ரோ மாடல்களின் உற்பத்தியை ஆப்பிள் அதிகரிக்க உள்ளது.
Similar News
News October 24, 2025
ஐபோன் கலர் மாறுவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

ஆரஞ்ச் நிறத்தின் விற்பனை செய்யப்பட்ட ஐபோன் 17 ப்ரோ மற்றும் 17 ப்ரோ மேக்ஸ் செல்போன்கள் பிங்க் நிறத்தில் மாறுவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் போட்டோஸை பகிர்ந்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதனிடையே ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ள திரவங்களை கொண்டு ஐபோன்களை துடைக்க வேண்டாம் என ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. உங்க ஐபோன் கலர் மாறுச்சா?
News October 24, 2025
SPORTS ROUNDUP: சாதனை நாயகியாக மாறும் ஸ்மிருதி

*வியன்னா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினர் சின்னர், ஸ்வெரேவ் *புரோ கபடி லீக்: ஜெய்ப்பூரை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது பாட்னா பைரேட்ஸ் *வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ODI தொடரை கைப்பற்றிய வங்கதேசம் *சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த மெக் லானிங் சாதனையை சமன் செய்த ஸ்மிருதி மந்தனா *தெற்காசிய தடகள போட்டி ராஞ்சியில் இன்று தொடக்கம்
News October 24, 2025
கலவர வழக்கு: அமைச்சர் சிவசங்கர் விடுதலை

2015-ல் கல்குவாரி உரிமை தொடர்பாக அப்போதைய குன்னம் தொகுதி MLA-வும், இப்போதைய அமைச்சருமான சிவசங்கர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலவரம் ஏற்பட்டு காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக சிவசங்கர் உள்பட 31 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி, சிவசங்கர உட்பட 27 பேரை(4 பேர் இறந்துவிட்டனர்) சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்யப்பட்டனர்.


