News February 15, 2025
கணவன், மனைவி துரோகம் செய்கிறாரா? 7 அறிகுறிகள்

*செல்போனை மறைப்பது, எப்போதும் மெசேஜ் டெலிட் செய்வது, பக்கத்திலேயே போனை வைத்திருப்பது *போன் கால்களை அவாய்ட் செய்வது *கேள்விகளுக்கு மிகவும் உணர்ச்சிவசப்படுதல் *செக்ஸில் ஆர்வம் காட்டாதது, புறக்கணிப்பது, புதிய பொசிஷனில் திடீர் ஆர்வம் *ரகசிய சோஷியல் மீடியா கணக்குகள் *கணக்கில் காட்டாமல் பணம் செலவழித்தல் *தொடர் பொய்கள் *கண்களை பார்த்துப் பேசுவதை தவிர்த்தல் *இதுவரை இல்லாத புதிய பழக்கங்கள். உங்க கருத்து?
Similar News
News November 20, 2025
ரஷ்யா – பிரிட்டன் இடையே மோதலா?

பிரிட்டனின் கடல் எல்லைக்குள் நுழைந்த ரஷ்யாவின் கப்பலான ‘Yantar’, கண்காணிப்பு விமானிகள் மீது லேசர் கதிர்களை பாய்ச்சியதாக கூறப்படுகிறது. ரஷ்யா இதை ஆராய்ச்சி கப்பல் என்று கூறினாலும், பிரிட்டன் ரஷ்யாவின் உளவு கப்பல் என குற்றஞ்சாட்டியுள்ளது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது தெரியும் என கூறிய பிரிட்டன் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதன் மூலம் இருநாடுகள் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
News November 20, 2025
கவர்னரின் அடாவடி: CM ஸ்டாலின்

கோவை, மதுரை மெட்ரோ திட்டத்துக்கு மறுப்பு தெரிவித்ததாக, மத்திய அரசை கண்டித்து INDIA கூட்டணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், SIR மூலம் வாக்குரிமையை பறித்தும், Delimitation மூலம் தமிழ்நாட்டின் தொகுதிகளை குறைத்தும், மக்களாட்சி மாண்பை மதிக்காத கவர்னரின் அடாவடி என அனைத்துக்கு எதிராகவும் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
மசோதா ஒப்புதலுக்கு காலக்கெடு விதிக்க முடியாது: SC

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதி, கவர்னருக்கு குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க முடியாது என SC அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. TN அரசின் வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த அத்தகைய உத்தரவு அரசமைப்புக்கு எதிரானது எனவும், மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருக்கும்போது மட்டுமே நீதித்துறை மறு ஆய்வு செய்ய முடியும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.


