News February 19, 2025
விண்கல்லால் பூமிக்கு ஆபத்தா? ஆட்டம் காட்டும் கணிப்பு

சிலியின் எல் சாஸ் ஆய்வு நிலைய TELESCOPEல் கடந்த ஆண்டு பயங்கரமான காட்சி பதிவானது. பாகுபலியில் பிரபாஸை பார்த்து மிரளும் நாசரை போல, விஞ்ஞானிகளும் அதைக் கண்டு மிரண்டனர். ஏனெனில் பூமியை நோக்கி ராட்சத விண்கல் வந்துக் கொண்டிருந்த காட்சி அது. மேலும், அதன் விட்டம் 177 அடி, 2032ல் மோதலாம் என கணிக்கப்பட்டது. அதற்கான சான்ஸ் 2.6% ஆக இருந்தது. ஆனால், இந்த வாரம் அதன் சதவீதம் 3.1% உயர்ந்துள்ளது.
Similar News
News September 13, 2025
நீங்கள் வேலையில் நீடிக்க இதை செய்தே ஆக வேண்டும்!

எதிர்காலத்தில் ஒருவர் வேலையில் இருப்பது மிக சவாலான காரியம் என நோபல் பரிசு பெற்றவரும், DEEP MIND-ன் CEO-வுமான டெமிஸ் ஹசாபிஸ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும் AI மேம்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தை கணிப்பது கடினமானதாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருந்தால்தான் வேலையில் நீடிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
இடையூறுகளை தாண்ட வேண்டும்: பிரேமலதா

தமிழகத்தில் இதுவரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் விதிக்காத நிபந்தனைகளை, தவெகவுக்கு விதித்ததாக விஜய் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், இதுபோன்ற பல இடையூறுகள், சவால்களை தாண்டித்தான் இலக்கை அடைய முடியும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்தபோதே விஜயகாந்தும் அரசியலுக்குள் நுழைந்து பல தடைகளை தாண்டியவர் என்றும் கூறியுள்ளார்.
News September 13, 2025
BCCI தலைவர் ரேஸில் இணைந்த ஹர்பஜன்

பஞ்சாப் கிரிக்கெட் சங்கம், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை BCCI-ன் தலைவர் பதவிக்கு முன்மொழிந்துள்ளது. மாநில கிரிக்கெட் சங்கங்களால் முன்மொழியப்பட்டவர்களே BCCI தலைவருக்கான தேர்தலில் போட்டியிட முடியும். ஹர்பஜன் சிங் இதுவரை இந்திய அணிக்காக 367 சர்வதேச போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். வரும் 28-ம் தேதி BCCI தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.