News October 22, 2025
சாராயம் விற்பதில் சாதிப்பது தான் திராவிட மாடலா?: PMK

தமிழகத்தில் 3 நாட்களில் பெய்த மழையை விட, மது மழை மிக அதிகம் என்று அன்புமணி சாடியுள்ளார். தீபாவளியை ஒட்டி 3 நாட்களில் ₹790 கோடி மதுவிற்பனை நடைபெற்றிருப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொண்டாட்டங்கள் என்றாலே மது அருந்துவது தான் என்ற நிலைக்கு மக்களை அரசு தள்ளியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அன்புமணி, சாராயத்தில் சாதிப்பது தான் திராவிட மாடலா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News March 26, 2026
கொமதேக போட்டியிடும் தொகுதிகள் எவை?

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி(கொமதேக) திருச்செங்கோடு மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி திருச்செங்கோட்டில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது. மீண்டும் திருச்செங்கோடு தொகுதியில் MLA ஈஸ்வரன் களமிறங்க உள்ளதாகவும், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. TNElection2026
News March 26, 2026
பாகிஸ்தான் ஒரு ‘தரகர் நாடு’: ஜெய்சங்கர்

ஈரான்-USA இடையே சமரசம் செய்யும் பாகிஸ்தானை ‘தரகர் நாடு’ என ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார். அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய அவர், இந்தியா 2 நாட்டிற்கிடையே நடக்கும் விஷயத்தில் தலையிடாது; USA தனது தேவைகளுக்கு PAK-ஐ பயன்படுத்துவது புதிதல்ல எனவும் கூறியுள்ளார். ஈரான் போரை நிறுத்தும் வாய்ப்பை இந்தியா நழுவவிட்டதாக காங்கிரஸ் உள்பட பலர் விமர்சித்து வந்த நிலையில் அதற்கு ஜெய்சங்கர் இப்படி பதிலளித்துள்ளார்.
News March 26, 2026
ELECTION: அண்ணாமலை விலகல்.. பரபரப்பு காரணம்

தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கூறி அண்ணாமலை, பாஜக <<19472595>>தலைமைக்கு கடிதம்<<>> எழுதியுள்ளார். தேர்தல் ரேஸில் இருந்து அண்ணாமலையின் விலகல் முடிவால் அவரது ஆதரவாளர்கள் பலரும் SM-ல் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அண்ணாமலை போட்டியிட விரும்பிய கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் அல்லது சொந்த தொகுதியான அரவக்குறிச்சி பாஜகவுக்கு கிடைக்கவில்லை என்பதே இம்முடிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>


