News April 11, 2025
டாக்டர் தவறான சிகிச்சையா? சட்டம் என்ன சொல்கிறது?

தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட டாக்டர்கள், கவனக்குறைவால் நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளித்தாலும் அது சட்டப்படி குற்றமே. அவர்களுக்கு என்ன தண்டனை அளிக்கப்படும் என்பது குறித்து பிஎன்எஸ் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த டாக்டர்களுக்கு அபராதத்துடன், அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News September 18, 2025
சென்னை ஆணையரகத்தில் நடிகர் பாலா மீது புகார்

நடிகர் பாலா மீதும், காந்தி கண்ணாடி படக்குழு மீதும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, காந்தி கண்ணாடி திரைப்படத்தில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் காட்சிகள் மற்றும் வசனங்கள் இருப்பதாகக் கூறி, சிவசேனா கட்சியினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனர் ஷெரீப், நடிகர் கேபிஒய் பாலா மற்றும் பாலாஜி சக்திவேல் மீது புகார் தெரிவித்துள்ளனர்.
News September 18, 2025
BREAKING: மீண்டும் கூட்டணியில் OPS, TTV?

NDA கூட்டணியில் OPS, TTV, சசிகலா இணைவார்களா என்ற கேள்விக்கு EPS நேரடியாக பதிலளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு பெரிய கட்சிகள் கூட்டணி அமைப்பது இயல்பான ஒன்றுதான்; கூட்டணி, உள்கட்சி விவகாரம் குறித்து நாங்கள் பேசி முடிவு எடுத்துக்கொள்வோம் என்று நேரடியாக இல்லாமல் சூசகமாக பதிலளித்தார். இதனால், OPS, TTV மீண்டும் கூட்டணியில் இணைய வாய்ப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News September 18, 2025
சீன மாஸ்டர்ஸ்: காலிறுதியில் பி.வி.சிந்து

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார். 6-ம் நிலையில் உள்ள தாய்லாந்தின் போர்ன்பாவி சோச்சுவாங்கை எதிர்கொண்ட அவர், 21 – 15, 21 -15 என்ற கணக்கில் வெற்றியடைந்தார். சமீபகாலமாக பெரிய வெற்றியை பெறாமல் உள்ள சிந்து, இந்த தொடரில் தடம் பதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் போராடி வருகிறார்.