News January 2, 2025
மரண தண்டனை அவசியம்தானா?

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே, தனது நாட்டில் இனி மரண தண்டனைகள் விதிக்கப்படாது என்று அறிவித்துள்ளது. ஆனால், வளர்ந்த நாடான இந்தியாவில் இன்னும் மரண தண்டனைகள் தொடர்வது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மனிதாபிமானமற்ற இந்த தண்டனையை அரசாங்கமே வழங்குவது கொடுமையான விஷயம் எனவும் குற்றவாளிகளை நல்வழிப்படுத்துவதே சரியான நடைமுறை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
Similar News
News November 19, 2025
இந்தியாவின் பயிற்சியில் புதிய சுழற்பந்து வீச்சாளர்

தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய வீரர்கள் தடுமாறியதே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் கௌசிக்கை வைத்து இந்திய பேட்ஸ்மேன்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கௌசிக் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு வலது கையிலும், வலது கை பேட்ஸ்மேன்களுக்கு இடது கையிலும் போடும் திறமை கொண்டவர்.
News November 19, 2025
பக்தர்களுக்கு மலையேற்றம் உண்டா? எ.வ.வேலு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகா கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மலையில் ஏற அனுமதி உண்டா என பக்தர்களுக்கு குழப்பம் உள்ளது. இந்நிலையில், தீபத்தின் போது ஈரப்பதத்தை பொறுத்து மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்படுவதா இல்லையா என முடிவெடுக்கப்படும் என அமைச்சர் எவ வேலு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News November 19, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 524
▶குறள்:
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.
▶பொருள்: தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்.


