News March 17, 2024
மக்களவைத் தேர்தல் செலவு இவ்வளவா?

மக்களவைத் தேர்தலுக்கான செலவு 1.20 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க தேர்தலுக்கு ஆகும் செலவுக்கு சமம் என்று கூறப்படுகிறது. இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்ய நாடுகளின் மொத்த ஜனத்தொகையை விட அதிகம். உலகின் மிகப்பெரிய தேர்தல் இது என்றாலும், இதுவரை அதிகபட்சமாக 67% பேர் தான் வாக்களித்துள்ளனர்.
Similar News
News October 20, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 494
▶குறள்:
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
▶பொருள்: ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்.
News October 20, 2025
தலை தீபாவளி கொண்டாடும் திரை நட்சத்திரங்கள்

இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை புதுமண தம்பதிகளுக்கு கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷல். அந்த வகையில் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் திரையுலக பிரபலங்கள் யார் யார் என்பதை SWIPE செய்து பாருங்கள்.. அதோடு தலை தீபாவளி வாழ்த்துகளை லைக்ஸ் போட்டு தெரிவிக்கவும்.
News October 20, 2025
விரைவில் வரும் சீமானின் தண்ணீர் மாநாடு

சீமான் ஏற்கெனவே ஆடு, மாடு மாநாடு மற்றும் மலைகளின் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். அடுத்ததாக தூத்துக்குடியில் கடல் மாநாட்டையும் நடத்துவதாக அறிவித்த சீமான், கடலில் அப்பகுதி மக்களுடன் சென்று ஆய்வு நடத்தினார். இந்நிலையில், தஞ்சையில் நவ.15-ம் தேதி தண்ணீர் மாநாடு நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார். கல்லணை அருகே உள்ள பூதலூர் இந்த மாநாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.