News August 30, 2025
குடும்ப முதலீடு செய்ய CM வெளிநாட்டு பயணமா? EPS

CM-ன் வெளிநாட்டு பயணம் முதலீடுகளை ஈர்க்கவா அல்லது குடும்ப முதலீட்டை மேம்படுத்தவா என EPS விமர்சித்துள்ளார். இதுவரை ஈர்த்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன் எனவும், இதுவரை 4 முறை வெளிநாடு சென்றுள்ள CM, சொல்லும்படியான முதலீட்டை ஈர்த்தாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வெளிநாட்டில் சைக்கிள் ஓட்டி பொன்னான நேரத்தை வீணடித்து விட்டதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News August 31, 2025
பென்ஷன் கேட்டு ஜெகதீப் தன்கர் விண்ணப்பம்

முன்னாள் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்ததற்கான ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஒப்புதல் கிடைத்தால், தன்கருக்கு மாதம் ₹42,000 ஓய்வூதியம் கிடைக்கும். உடல்நலக் காரணங்களுக்காக துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த பிறகு, தன்கர் பொது வாழ்க்கையில் இருந்து விலகி இருக்கிறார். இது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
News August 31, 2025
விஜய்க்காக அரசியல் படம் இயக்கினேன்: முருகதாஸ்

விஜய் கேட்டுக்கொண்டதாலேயே அரசியல் படமான சர்காரை இயக்கியதாக முருகதாஸ் தெரிவித்துள்ளார். கத்திக்கு பிறகு விஜயை வைத்து இலங்கை அகதியின் கதை ஒன்றை பண்ண முடிவெடித்ததாகவும், ஆனால் விஜய் அரசியல் படம் வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். படத்தில் அமைந்த விஜய்யின் சர்கார் நிஜத்தில் அமையுமா? கமெண்ட் பண்ணுங்க மக்களே…
News August 31, 2025
ஜாக்கி சானின் பொன்மொழிகள்

⁎நான் ஒருபோதும் அடுத்த புரூஸ் லீ ஆக இருக்க விரும்பவில்லை. நான் முதல் ஜாக்கி சானாக மட்டுமே இருக்க விரும்பினேன். ⁎சூழ்நிலைகள் உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். நீங்கள் உங்கள் சூழ்நிலைகளை மாற்றியமையுங்கள். ⁎சில நேரங்களில் ஒரு நபரின் வாழ்க்கையை மாற்றுவதற்கு அன்பும் அக்கறையுமே போதுமானது. ⁎ஒரு கதை முடிவடைந்தவுடன், மற்றொரு கதை தொடங்குகிறது.