News August 25, 2024
அவ்வளவு பயமோ? சீமானுக்கு எஸ்பி பதிலடி

எஸ்பி வருண்குமார் – சீமான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. “வீரம் இருந்தால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு என்னுடன் மோத முடியுமா?” என சீமான் சவால் விடுத்தார். இதற்கு வருண்குமார், பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது, நில அபகரிப்பு, ரவுடித்தனம் செய்வதை சிலர் நிறுத்தினால், நான் காக்கிச் சட்டையை கழற்றுவது பற்றி யோசிக்கிறேன். நான் காக்கிச் சட்டையில் இருப்பது அவ்வளவு பயமோ? என பதிலடி கொடுத்தார்.
Similar News
News December 7, 2025
சச்சினின் சாதனையை முறியடித்த கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை தொடர்நாயகன் (MOS) விருது வென்றவர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். SA-வுக்கு எதிரான ODI தொடரில் 302 ரன்கள் குவித்த கோலிக்கு MOS வழங்கப்பட்டது. இது அவருக்கு 20-வது விருதாகும். சச்சின் 19 முறை MOS வென்றிருந்தார். அதேபோல, ODI-ல் அதிகமுறை MOS வென்றவர்கள் பட்டியலில் ஜெயசூர்யாவுடன் 2-வது இடத்தை கோலி பகிர்ந்துள்ளார். இருவரும் 11 முறை வென்றுள்ளனர்.
News December 7, 2025
அலர்ட்.. 7 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இரவுநேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனமுடன் இருக்கவும். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க
News December 7, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 7, கார்த்திகை 21 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3.15 PM – 4.15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 1.30 PM – 2.30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்


