News March 31, 2024

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திடீர் மிரட்டல்

image

ஐஎஸ் அமைப்பு திடீர் மிரட்டல் விடுத்திருப்பதால், நாடு முழுவதும் உளவுத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 2014இல் ரமலானின்போது ஐஎஸ் உருவாக்கப்பட்டது. இந்தாண்டுடன் 10 ஆண்டு ஆவதையொட்டி, அதன் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள ஆடியோவில், “உலகெங்கிலும் ஐஎஸ் அமைப்பினர் தனிநபர் தீவிரவாத தாக்குதலை நடத்துங்கள்” என வலியுறுத்தியுள்ளார். இதனால் நாடு முழுவதும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 12, 2026

இரவிலும் மழை பெய்யும்

image

குமரிக்கடல், அதனையொட்டிய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

News January 12, 2026

டெல்லியில் காங்., தவெக கூட்டணி பேச்சுவார்த்தையா?

image

ஆட்சியில் பங்கு கேட்டு காங்கிரஸ் திமுகவுக்கு ஒருபுறம் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், மறுபுறம் தவெக-காங்கிரஸ் கூட்டணி குறித்த பேச்சும் தொடர்கிறது. இந்நிலையில் சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்றுள்ள விஜய்யிடம் பேசலாம் என காங்கிரஸின் ஒரு தரப்பு ராகுலிடம் ஆலோசித்துள்ளனர். ஆனால், இப்போது பேச வேண்டாம், கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என கட்சியினருக்கு ராகுல் ஸ்ட்ரிக்ட்டாக அறிவுறுத்தியுள்ளாராம்.

News January 12, 2026

‘வா வாத்தியார்’ ரிலீசில் நீடிக்கும் சிக்கல்

image

பொங்கல் விருந்தாக கார்த்தியின் ‘வா வாத்தியார்’ ஜன.14-ல் ரிலீசாகும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவித்திருந்தார். ₹21 கோடி கடன் பிரச்னை காரணமாக பட ரிலீசிற்கு மெட்ராஸ் HC தடைவிதிக்க, இன்று ₹3.75 கோடி தொகையை அவர் திருப்பி செலுத்தினார். இதையடுத்து ரிலீசிற்கு விதித்த தடையை நீக்குமாறு வாதிடப்பட்ட நிலையில், முழுத் தொகையை செலுத்த கோர்ட் உத்தரவிட்டது. இதனால் வா வாத்தியார் ரிலீசில் சிக்கல் நீடிக்கிறது.

error: Content is protected !!