News February 27, 2025

டாஸ்மாக்கில் இப்படியா… கஸ்டமர்கள் கவலை

image

சென்னையில் 4,837 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், நிறைய கடைகளில் குவார்ட்டருக்கு கூடுதலாக காசு வாங்குவது சர்ச்சையானது. இந்நிலையில், கடைகளின் போர்டுகளில் இருக்கும் 4 டிஜிட் நம்பர், வேண்டுமென்றே மறைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் புகார்கள் எழும்போது, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை அடையாளம் காண முடியாமல் போவதால், டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News March 5, 2026

தமிழக தேர்தல் எப்போது? வெளியான அப்டேட்

image

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதியை <<19301081>>வரும் 13-ம் தேதி<<>> ECI அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், 2021 சட்டப்பேரவைத் தேர்தலைப் போல் இம்முறை ஏப்ரலில் தேர்தல் நடத்த வாய்ப்புகள் குறைவு எனக் கூறப்படுகிறது. தமிழகத்திற்கு மே மாதத்தில் தேர்தல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 10 உடன் முடிவடைகிறது.

News March 5, 2026

ராஜ்யசபா தேர்தலில் வேட்பாளரை இறக்கிய ராமதாஸ்

image

ராஜ்யசபா தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸின் உதவியாளரான ப.சுவாமிநாதன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ராமதாஸுக்கு 2 MLA-க்கள் ஆதரவு உள்ள நிலையில் இந்த வேட்புமனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக வசமுள்ள ராஜ்ய சபா சீட்டுக்கு மனுத்தாக்கல் செய்துள்ள அன்புமணிக்கு போட்டியாகவே இந்த முடிவை ராமதாஸ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

News March 5, 2026

விஜய்யின் திமுக எதிர்ப்பை பாராட்டுகிறேன்: தமிழிசை

image

திமுகவை விரட்ட வேண்டும் என்பது மட்டுமே தங்களின் குறிக்கோள் என தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். திமுகவின் தவறுகளையும், நீட் விலக்கு, கேஸ் மானியம் உள்ளிட்ட திமுகவின் பொய் வாக்குறுதிகளை விஜய் தெளிவாக எடுத்துச் சொல்வதாகவும், அவரது திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை தான் பாராட்டுவதாகவும், மற்றபடி திமுக – அதிமுக டீலிங் என்று விஜய் விளையாட்டாக பேசி வருவதாக குறிப்பிட்டார்.

error: Content is protected !!