News August 24, 2025

டாஸ்மாக் அரசுக்கு, தூய்மை பணி தனியாருக்கா? சீமான்

image

மக்களின் உயிரை கொல்லும் TASMAC கடையை அரசு நடத்தும்போது, தூய்மை பணியை அரசு நடத்த தயங்குவது ஏன் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், மின்சாரத்துறை அலட்சியத்தால் உயிரிழந்த இளம் தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கு ₹20 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டால் போதுமா என்றார். மேலும், குடிநீர், கல்வி, மருத்துவம் உள்ளிட்டவைகளை தனியாருக்கு கொடுத்தால் அரசு எதற்கு என சாடினார்.

Similar News

News August 24, 2025

GPay, Phonepe பணத்துக்கு சிக்கலா? உடனே இதை செய்க

image

Gpay, Phonepe-ல தவறான நபருக்கு பணம் அனுப்பிட்டா, அத காந்தி கணக்குல எழுதவேண்டிய அவசியமில்ல. இந்த சிம்பிள் வழிகள் மூலம் பணத்த திரும்பப் பெறலாம் ▶நீங்க பணம் அனுப்புன நபரை தொடர்புகொண்டு பணத்த திருப்பிக் கொடுக்கச் சொல்லுங்க ▶அந்நபர் மறுக்கும் பட்சத்தில் உங்களோட வங்கியில நீங்க முறையிடலாம் ▶புகார் கொடுத்தும் வேலை நடக்கலன்னா, NPCI-யோட இலவச எண் 1800-120-1740-க்கு அழைத்து புகாரளியுங்க. SHARE IT.

News August 24, 2025

அனைத்து பள்ளிகளுக்கும் ஒருநாள் விடுமுறை

image

கடந்த 2 நாள்களாக விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு, அடுத்த 2 நாள் கழித்து மீண்டும் விடுமுறை வருகிறது. ஆம், நாளை, நாளை மறுநாள் என 2 நாள்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும். புதன்கிழமை (27-ம் தேதி) விநாயகர் சதுர்த்தி வருவதால், அன்று அரசு விடுமுறையாகும். 27-ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் மாநிலம் முழுவதும் விடுமுறையாகும்.

News August 24, 2025

ஜாம்பவான்களின் வாரிசு… அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும்

image

புகைப்படத்தில் உள்ள இருவரையும் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். இவ்விருவரின் தந்தையும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு காலம் கடந்த பெருமை சேர்த்த ஜாம்பவான்கள். பேட் வைத்திருப்பர் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவின் மகன் ரனுக், சுழற்பந்து வீசுபவர் முத்தையா முரளிதரனின் மகன் நரேன். உள்ளூர் போட்டியில் இருவரும் விளையாடிய புகைப்படம் இது. இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் பாதுகாப்பான கைகளிலேயே உள்ளது.

error: Content is protected !!