News October 27, 2025

அடுத்த தலைமை நீதிபதியா சூர்யகாந்த்?

image

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நவ.23-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால், புதிய தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணியை மத்திய சட்ட அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அனுபவத்தின் அடிப்படையில் தனக்கு அடுத்த நிலையில் உள்ள சூர்யகாந்தை தலைமை நீதிபதியாக நியமிக்க கவாய் பரிந்துரை செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Similar News

News October 27, 2025

AI-ஆல் பறிபோன உயிர்.. எளிய மக்களுக்கும் அச்சுறுத்தல்

image

இதுவரை நடிகை, நடிகர்களின் Deep Fake வீடியோக்கள் வெளியாகின. அது தற்போது சாதாரண மக்கள் வாழ்விலும் புகுந்துள்ளது. ஹரியானாவை சேர்ந்த ராகுலிடம், ₹20,000 தரவில்லை என்றால், அவரது 3 சகோதரிகளின் AI Deep Fake நிர்வாண வீடியோக்களை வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் ராகுல் தற்கொலை செய்துகொண்டார். இது போன்ற மிரட்டல்கள் வந்தால் பதற்றமாகாமல், போலீஸை அணுக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

News October 27, 2025

Women’s CWC: படுகாயமடைந்த பிரதிகா ராவல் விலகல்

image

மகளிர் உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய வீராங்கனை பிரதிகா ராவல் விலகியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்த போது, பிரதிகா ராவலுக்கு கணுக்காலில் படுகாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஹர்லின் தியோல் ஓபனிங் இறங்குவார் எனக் கூறப்படுகிறது. தொடரில் 308 ரன்கள் குவித்த பிரதிகா ராவலின் விலகல் இந்திய அணிக்கு பின்னடைவாகும்.

News October 27, 2025

BREAKING: அறிவித்தார் விஜய்

image

கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விஜய் ஆறுதல் தெரிவிக்கும் நிகழ்வு நிறைவடைந்துள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, பாதிக்கப்பட்ட மக்களிடம் கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார். அப்போது முக்கியமான அறிவிப்பாக, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடைய கல்வி, மருத்துவச் செலவுகளை ஏற்பதாகவும், வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் விஜய் உறுதியளித்துள்ளார்.

error: Content is protected !!