News April 8, 2025

சிறந்த வீரர் ஆவாரா ஷ்ரேயஸ் ஐயர்?

image

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து ICC கவுரவித்து வருகிறது. அதில், மார்ச் மாதத்திற்கான பரிந்துரை பட்டியல் வெளியாகியிருக்கிறது. இதில், இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர், நியூசிலாந்து வீரர்கள் ஜேக்கப் டஃபி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். வீராங்கனைகளுக்கான பட்டியலில் அமெரிக்காவின் சேத்னா பிரசாத், ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வோல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Similar News

News September 11, 2025

ஜிவி சம்பளம் வாங்காத படங்களின் லிஸ்ட்

image

காக்கா முட்டை, சைவம் படங்கள் குழந்தைகள் சார்ந்த நல்ல கதை என்பதால், அப்படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை என ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நடித்துள்ள பிளாக்மெயில் பட நிகழ்ச்சியில் பேசும்போது, வசந்தபாலன் தன்னை அறிமுகப்படுத்தியதால், அவர் இயக்கிய அநீதி படத்திற்கும், அதேபோல் வெற்றிமாறனின் விசாரணை படத்திற்கும் சம்பளம் வாங்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

News September 11, 2025

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி… உங்க லிவரை பாருங்க

image

தொடர்ந்து, நீண்டகாலமாக மது அருந்துவது கல்லீரலை முற்றிலுமாக பாதிக்கும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். ஒருவர் அருந்தும் மதுவை கல்லீரல் முழுமையாக ஜீரணிப்பதுடன், அப்போது பல ரசாயனங்களையும் வெளிவிடுகிறது. இதன் ஆபத்துகளை உணர்த்தும் வகையில் பிரபல ‘லிவர் டாக்டர்’ சிரியாக் ஆபி பிலிப்ஸ், மதுவால் கல்லீரல் நோய் பாதித்த ஒருவரின் போட்டோவை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பின்பும் குடிக்க தோணுதா?

News September 11, 2025

இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த நேபாள தலைவர்

image

PM மோடி மீது தனக்கு நன்மதிப்பு உள்ளதாக நேபாளத்தின் இடைக்கால அரசு தலைவர் சுசீலா கார்கி தெரிவித்துள்ளார். இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்த அவர், போராட்டத்தில் கொல்லப்பட்ட இளைஞர்களை கவுரவிப்பதே தனது முதன்மையான பணி என கூறியுள்ளார். அதேபோல் சுசீலாவை இடைக்கால தலைவராக ஏற்றுக் கொண்ட Gen Z போராட்ட குழு, அடுத்த 6 மாதத்திற்குள் பொதுத்தேர்தலை நடத்தவும் வலியுறுத்தியுள்ளது.

error: Content is protected !!