News April 27, 2025

நடிகையா, சச்சின் மகளா? கில் கொடுத்த விளக்கம்

image

கடந்த 3 ஆண்டுகளாகவே சிங்கிளாக இருப்பதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் சந்தித்தே இருக்காத பெண்களுடன் கூட தன்னை தொடர்புபடுத்தி வதந்தி பரப்புவதாகவும், தன்னுடைய முழுக்கவனமும் தற்போது கிரிக்கெட்டில் தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சச்சின் மகள் சாரா மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலிகான் ஆகியோருடன் கில் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தகவல்கள் பரவின.

Similar News

News August 31, 2025

BREAKING: விஜய் தலைமையில் கூட்டணி

image

2026 தேர்தலில் விஜய் தலைமையில் புதிய அணி அமையும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணிகள், சீமான் தனித்து போட்டி என்ற சூழல் இருக்கும் நிலையில், விஜய் தலைமையில் நான்காவதாக ஒரு அணி உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என டிடிவி ஏற்கெனவே கூறி இருந்தார். அவரது கருத்து தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்கான அச்சாரமாக பார்க்கப்படுகிறது.

News August 31, 2025

ஆஸி.,யில் இந்தியர்களுக்கு எதிராக போராட்டம்

image

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறி, ஆயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் பேரணி நடத்தியுள்ளனர். இதை தடுக்க அரசியல்வாதிகளுக்கு தைரியம் இல்லை எனவும், இந்த மாஸ் குடியேற்றத்தை தடுக்க ஆஸ்திரேலியர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். ஆனால், இவர்கள் நாட்டில் இன்வெறியையும், வெறுப்பையும் பரப்புவதாக அரசாங்கம் சாடியுள்ளது.

News August 31, 2025

‘ஜெயிலர் 2’ பற்றி பேச விரும்பவில்லை: நெல்சன்

image

‘ஜெயிலர் 2’ படம் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக இயக்குநர் நெல்சன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுவதாகவும், இந்த நேரத்தில் மேலும் ஓவராக பேசி ஹைப்பை ஏற்ற வேண்டாம் என தான் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அப்படி பேசினால் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துவிடும் என்பதால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!