News April 1, 2025

மாற்றப்படுகிறாரா செல்வ பெருந்தகை?

image

ஆம்ஸ்ட்ராங் கொலை உட்பட அடுத்தடுத்து காங்., மாநில தலைவர் செல்வபெருந்தகை சர்ச்சையில் சிக்கினார். இதற்கிடையில், அவருக்கு எதிராக தேசியத் தலைமையிடம், 25 மாவட்ட தலைவர்கள் புகார் கொடுத்துள்ளனர். இதனால், தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அவர் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டால், அந்த இடத்தைப் பிடிக்க ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் காய் நகர்த்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News October 25, 2025

தொடரை இழந்தாலும் இந்தியா தான் நம்பர் 1: மிட்செல் மார்ஷ்

image

நாங்கள் தொடரை வென்றாலும் இந்தியாதான் உலகின் நம்பர் 1 அணி என ஆஸி., கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மாவும், கோலியும் கடந்த 10 ஆண்டுகளாக எதிர் அணிகளை எவ்வாறு வீழ்த்தி இருக்கிறார்கள் என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். இந்திய அணியின் செயல்பாடுகளில் இருந்து எங்களுடைய இளம் வீரர்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

News October 25, 2025

LIC-யால் மோடியின் நண்பர்களுக்கே நன்மை: கார்கே

image

LIC-யால் பலனடைவது பாலிசிதாரர்கள் இல்லை, மோடியின் நண்பர்களே என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். அதானி குழுமத்தில் <<18102060>>LIC<<>> ₹33,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டிருந்ததாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், மோடியின் நண்பரின் பாக்கெட்டை நிரப்ப, 30 கோடி பாலிசிதாரர்களின் பணத்தை சுரண்டுவதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News October 25, 2025

சற்றுமுன்: பிரபல நடிகர் காலமானார்.. PM மோடி இரங்கல்

image

பாலிவுட் பழம்பெரும் <<18101845>>நடிகர் சதிஷ் ஷா<<>>(74) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு PM மோடி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய பொழுதுபோக்கின் உண்மையான ஜாம்பவானாக சதிஷ் ஷா என்றும் நினைக்கூரப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். தனது நகைச்சுவையால் எண்ணற்ற மக்களை சிரிக்க வைத்தவர் என புகழாரம் சூட்டிய மோடி, அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார். RIP

error: Content is protected !!