News October 22, 2025

நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா? அரசு புது உத்தரவு

image

மழை குறித்து ‘Red Alert’ எச்சரிக்கை விடுக்கப்பட்டால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதவிர அனைத்து வகைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் பருவமழை காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை ஆசிரியர்கள் அறிவுரைகளை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Similar News

News April 3, 2026

337 பணியிடங்கள்.. ITI தகுதி போதும்

image

இந்திய அணுசக்தி நிறுவனத்தில் 337 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னீசியன், இன்ஜினியர் உள்ளிட்ட பணிகளுக்கு ITI / டிப்ளமோ / B.E / டிகிரி கல்வித்தகுதி அவசியமாகும். மாதந்தோறும் 10,560 முதல் 12,300 வரை ஸ்டைபண்டாக வழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கு ஏப்.6-ம் தேதிக்குள் இந்த <>லிங்க்கில்<<>> விண்ணப்பிக்கவும்.

News April 3, 2026

மூட்டு வலியை தீர்க்கும் மூக்கிரட்டை கீரை

image

இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகளை கொண்ட மூக்கிரட்டை கீரை, நீண்ட காலமாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த கீரையை சாப்பிட்டால் *உடல் சூடு குறையும் *செரிமானம் மேம்படும் *ரத்தம் சுத்திகரிக்கப்படும் *மூட்டு வலி குறையும் *சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் குணமாகும் *நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதை மூல நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு தீர்வு பெறலாம்.

News April 3, 2026

ஏப்ரல் 3: வரலாற்றில் இன்று

image

*1680-சத்ரபதி சிவாஜி நினைவு நாள் *1903–சமூக சீர்திருத்தவாதி கமலாதேவி சட்டோபாத்யாய் பிறந்தநாள் *1904–பத்திரிகையாளர் ராம்நாத் கோயங்கா பிறந்தநாள் *1907–தமிழறிஞர் சிதம்பரநாதன் செட்டியார் பிறந்தநாள் *1951–அரசியல்வாதி பூ.செந்தூர் பாண்டியன் பிறந்தநாள் *1954–அரசியல்வாதி கிருஷ்ணசாமி பிறந்தநாள் *1955–ஹரிஹரன் பிறந்தநாள் *1973–பிரபுதேவா பிறந்தநாள் *1992–அரசியல்வாதி எஸ்.எஸ்.ராமசாமி நினைவு நாள்

error: Content is protected !!