News October 4, 2025
சரவண பவன் பயோபிக்கில் நடிக்கிறாரா சத்யராஜ்?

பிரபல சரவண பவன் ராஜகோபால் கதை படமாகவுள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. இதனை TJ ஞானவேல் இயக்கவுள்ளார். இந்நிலையில், சரவண பவன் அண்ணாச்சியாக சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பெரியார்’ பயோபிக் படத்தில் சத்யராஜ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ‘தோசை கிங்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்படைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News October 4, 2025
மனித சதையை கொடுத்த இயக்குநர்

பிரபல பாலிவுட் இயக்குநர் மஹேஷ் பாட், மனித சதையை பான் வடிவத்தில் ஒருவருக்கு கொடுத்ததாக கூறியது சர்ச்சையாகியுள்ளது. தன்னுடைய கஷ்ட காலத்தில் வாரணாசி சென்றபோது, அங்குள்ள ஒரு சாமியார், பான் போதைப்பொருள் வடிவிலான மனித சதையை தனக்கு கொடுத்ததாக தெரிவித்தார். இதனை கொடுக்கும் நபரிடமிருந்து பணம் கிடைக்கும் என சாமியார் கூறியதாகவும், ஆனா தனக்கு பணம் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
News October 4, 2025
செவ்விந்தியர்கள் பொன்மொழிகள்

*அமைதிக்காக அழாதீர்கள், அமைதிக்காக செயல்படுங்கள்.
*என்னிடம் சொல், நான் மறந்துவிடுவேன்; காண்பி, நினைவில் நிறுத்த முடியாமல் போகலாம்; என்னை ஈடுபடுத்து, அப்போது புரிந்து கொள்வேன்.
*குறைவாகப் பேசும் வாயும், அதிகமாக உழைக்கும் கரங்களும் எப்போதும் சிறந்தவை.
*மனிதரின் சட்டங்கள் மனிதருக்கு மனிதர் மாறுபடும். ஆனால் இயற்கையின் சட்டங்கள் ஒருபோதும் மாறுவதில்லை. *நமது முதல் ஆசிரியர், நம் இதயமே.
News October 4, 2025
அமைதியை நிலைநாட்ட ஹமாஸ் ஒப்புதல்

இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான 20 அம்சங்கள் அடங்கிய அமைதி திட்டத்தை டிரம்ப் முன்மொழிந்திருந்தார். இதற்கு இஸ்ரேல் ஒப்புதல் வழங்கிய நிலையில், ஹமாஸ் ஒப்புதல் அளிக்க ஞாயிறு வரை அவகாசம் கொடுத்திருந்தார் டிரம்ப். இந்நிலையில், அனைத்து பணயக் கைதிகளையும் விடுவித்தல், அதிகாரத்தை கைவிடுதல் உள்ளிட்ட சிலவற்றிற்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது. மீதமுள்ள அம்சங்கள் ஆலோசனையில் உள்ளது.