News February 2, 2025

இயக்குநரை டேட்டிங் செய்கிறாரா சமந்தா?

image

தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜ் நிடிமோருடன் காதல் வசப்பட்டு இருப்பதாக சோஷியல் மீடியாவில் ஒரு கிசுகிசு பரவிவருகிறது. பிக்கில் பால் விளையாட்டில் சென்னை அணியின் உரிமையாளரான சமந்தா, அதன் தொடக்க விழாவில் ராஜுடன் நெருக்கமாக கைகோர்த்து போட்டோவுக்கு போஸ் கொடுத்ததை வைத்து இப்படி சொல்கின்றனர். இருவரும் Family Man-2, Citadel: Honey Bunny படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

Similar News

News March 5, 2026

ஈரானுக்கு சீனா உதவியதா?

image

சீனா ஈரானுக்கு ரகசியமாக ட்ரோன்கள், ஏவுகணைகள், பிற மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் முக்கிய தொழில்நுட்பத்தை வழங்கி உதவி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சீனாவின் ஆதரவு இல்லாமல் ஈரான் இவ்வளவு நாள் தாக்குப்பிடிக்க முடியாது என்று கூறப்படுகிறது. மேலும், ஈரான் அதன் எதிரிகள் மீது நடத்தி வரும் துல்லியமான தாக்குதல்களை மேற்கோள் காட்டி பின்னணியில் சீனா இருப்பதாக பலரும் விவாதித்து வருகின்றனர்.

News March 4, 2026

சரியான நேரத்தில் சரியான முடிவு.. செல்வபெருந்தகை

image

<<19298958>>தொகுதி பங்கீடு ஒப்பந்தம்<<>> கையெழுத்தானது திமுக – காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்துள்ளது. ஒப்பந்தம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வபெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் திமுகவுடன் இணைந்து சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார். இந்த முடிவால் தாங்கள் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் இருப்பதாக கூறினார். மேலும், யார் ராஜ்யசபா MP என்பதை விரைவில் அறிவிப்போம் என்றார்.

News March 4, 2026

புதுச்சேரியிலும் மகளிர் உரிமைத் தொகை ₹5,000

image

தமிழகத்தை தொடர்ந்து மகளிர் உதவி தொகையை முன்கூட்டியே வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு என மகளிர் உரிமைத் தொகையாக மொத்தம் ₹5,000 வழங்கி தமிழக அரசு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் அதை பின்பற்றி, ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான மகளிர் நிதி உதவி தொகையான ₹5,000-ஐ முன்கூட்டியே வரவு வைக்க உள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

error: Content is protected !!