News August 6, 2024
புதிய சாதனை படைப்பாரா ரோஹித் ஷர்மா?

ஒருநாள் போட்டியில் பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ள இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா மேலும் ஒரு சாதனை படைக்க உள்ளார். நாளை நடைபெறும் இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இன்னும் 2 சிக்ஸர்கள் அடித்தால் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெறுவார். ஷாகித் அப்ரிடி (351), கெயில் (331), ரோஹித் ஷர்மா (330) முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
Similar News
News March 26, 2026
FLASH: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது!

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை எல்லைத் தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 2 படகுகள், வலைகள், மீன்கள் உள்ளிட்ட உடைமைகளையும் கடற்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில வாரங்களாக மீனவர்கள் கைது பிரச்னை இல்லாமல் இருந்த நிலையில், மீண்டும் அட்டூழியம் நடப்பதாக மீனவர்களின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
News March 26, 2026
நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை: சீமான்

திருடர்களிடம் ஆட்சியை கொடுத்ததால், திருடிய காசில் ₹1,000 ₹2,000 பங்கு கொடுக்கிறான் என சீமான் விமர்சித்துள்ளார். கல்வி, மின்சாரம், மருத்துவத்தை திமுக இலவசமாக்காதது ஏன் என கேட்டுள்ளார். இலவசம் கொடுத்து மக்களை சோம்பேறியாக்கி, வடமாநிலத்தவருக்கு வேலை வழங்குவதாகவும், வட மாநிலத்தவருக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கினால், நாட்டை விட்டே வெளியேற வேண்டியதுதான் என்றும் பேசியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
Impact Player விதி நீடிக்குமா?

2023-ல் கொண்டுவரப்பட்ட Impact Player விதியை தொடரலாமா என்ற கேள்விக்கு அனைத்து IPL டீம் கேப்டன்களிடமும் கலவையான பதில்களே வெளிப்பட்டதாம். குறிப்பாக, MI கேப்டன் ஹர்திக் & DC கேப்டன் அக்சர் ஆகியோர் எதிராக பேசினார்களாம். இருப்பினும் 2027 சீசன் வரை இந்த விதி தொடரும் என்பதால், அதன் பின்னரே முடிவெடுக்கப்படும். போட்டி நடுவில் ஒரு extra player-ஐ substitute ஆக கொண்டு வர வைப்பதே Impact Player விதி.. தேவையா?


