News March 30, 2024
டைம் டிராவல் படத்தில் நடிக்கிறாரா ரஜினி?

ரஜினி நடிக்கவுள்ள புதிய படம், டைம் டிராவல் படமாக இருக்கலாம் என தகவல் பரவி வருகிறது. ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் ரஜினி தற்போது நடிக்கிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள பட போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் ரஜினியின் பின்னால் டைம் மெஷின் இருப்பது போல உள்ளது. இதை வைத்து டைம் டிராவல் படமாக இருக்கலாம் என தகவல் பரவுகிறது.
Similar News
News August 13, 2025
அக்டோபரில் இலவச லேப்டாப் வழங்க அரசு ஆயத்தம்!

கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்களை கொள்முதல் செய்வதற்காக <<17382505>>2 நிறுவனங்களை TN அரசு தேர்வு<<>> செய்து அறிவித்துள்ளது. கலை மற்றும் அறிவியல், பொறியியல், வேளாண்மை, மருத்துவக் கல்வி பயிலும் 20 லட்சம் மாணவர்களுக்கு வரும் அக்டோபரில் முதற்கட்டமாக லேப்டாப் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2019 வரை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது கவனிக்கத்தக்கது.
News August 13, 2025
TVK என்றால் என்ன? வேல்முருகன் விளக்கம்

TVK-வின் விரிவாக்கம் ‘தமிழக வாழ்வுரிமை கட்சி’ தான் என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதைவிடுத்து புதிதாக கட்சி ஆரம்பித்த ஒரு நடிகரின் கட்சியை TVK என பொதுமக்கள் அழைப்பது வேடிக்கையாக இருப்பதாக கூறினார். அரசுப்பணிகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டுமென கூறிய அவர், தமிழகத்தில் அதிகளவில் வடமாநிலத்தவர்கள் குடியேறுவதை ஒழுங்கப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
News August 13, 2025
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் மேற்கு பபுவா பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி நேற்று மாலை 1:54 மணிக்கு, நிலத்தின் அடியில் 39 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 7-ம் தேதி இந்தோனேசியாவில் 4.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.