News March 25, 2025
ராகுல் காந்தி இந்தியரா? தொடரும் கேள்விகள்

ராகுல் காந்தி, UK நாட்டின் குடியுரிமை வைத்திருப்பதாகவும், அவரது இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கர்நாடகாவைச் சேர்ந்த சிஷிர் கோர்ட்டில் மனு அளித்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், 4 வாரத்திற்குள் உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், இது பொய்யான குற்றச்சாட்டு என்று ராகுல் ஏற்கெனவே மறுத்திருந்தார்.
Similar News
News October 22, 2025
FLASH: மேலும் 4 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிப்பு

தொடர் மழை காரணமாக மேலும் 3 மாவட்டங்களுக்கு இன்று(அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், புதுக்கோட்டை மற்றும் சேலம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
News October 22, 2025
பெயரில் மாற்றம் செய்த ஹன்சிகா

ஹன்சிகாவின் விவாகரத்து சர்ச்சை ஒரு பக்கம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, அவர் திடீரென தன்னுடைய பெயரில் மாற்றம் செய்துள்ளார். அதாவது, ஆங்கிலத்தில் ‘Motwani’ என்பதை தற்போது ‘Motwanni’ என மாற்றம் செய்து இருக்கிறார். நியூமராலஜி படி பெயரை மாற்றினால் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் என ஹன்சிகா நம்புகிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
News October 22, 2025
இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழையால் தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இன்று(அக்.22) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலுார், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். அதேபோல் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மழை நேரத்தில் வீட்டில் பத்திரமாக இருங்கள்..!